பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்-வள்ளுவரும் சங்க காலமும்

117


என்று அழகாகத் திறம்பட அதிகன் படைச் செருக்கினையும் அவன் வீரத்தினையும் காட்டி அவனைப் பணிந்து திறையிடார் படும் பாட்டினையும் விளக்கியுள்ளார். இத்தகைய பாடல்கள் சங்க இலக்கியங்களில் பல உள. அவை அறிந்த ஆன்றோராகிய வள்ளுவர் இந்தச் சமுதாய வாழ்வின் நெறிகண்டே ‘படை’யை முதற் கூறினார் எனக் கொள்ளுவர். உண்மையும் அஃதே.

இனி, குடிகளைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் பலவாக விளக்குகின்றன. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் குடிபுரந்த சிறப்பினைக் காக்கைபாடினியார் ’ குழவி கொள்வாரின் குடிபுரந்து’ (ஆறாம் பத்துப் பதிகம்) எனக் காட்டி, மன்னன் மக்களைச் சொந்தக் குழவி எனவே, போற்றிப் பாராட்டும் திறத்தினை விளக்குகின்றார். வாழ்வில் குடி புரத்தலே சிறந்ததென்பதையும் அவர் பழி தூற்றலே மிகக் கொடியதென்பதையும் எண்ணியே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன் வஞ்சினப் பாட்டில், தான் எழுவரை அடக்கி வெற்றி பெறவில்லையானால் ‘குடி பழி தூற்றும் கோலே னாகுக" (புறம் 72) எனக் கூறியதனைக் காண்கின்றோம். அக்குடி மக்களையும் அவர் வாழும் உலகையும் மன்னன் உயிரென ஒம்பவேண்டும் என்ற உண்மையினையே,

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னின் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதினால் யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே

(புறம் 186)

என்று மோசி கீரனார் அழகுறக் காட்டுகின்றார்.

“கூழ்’ என்னும பொருளைப் பற்றிப் பாடாத புலவர் இல்லை. மக்கள் நல்லுணவு கொண்டு சிறக்க வாழும் வாழ்வினை விளக்காத பாடல் இல்லை எனலாம். வாழ்வு ’கூழ்’ பற்றி நிற்பதன்றோ? கூழ் என்ற சொற்கு உணவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/119&oldid=1363471" இலிருந்து மீள்விக்கப்பட்டது