பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழர் வாழ்வு


நான்கே, அணிகிற ஒரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே"
(புறம்-109)

என்று காட்டி, மக்கள் கைவருந்திப் பெறுகின்ற பொருள்களோடு இயற்கைப் பொருள்களும் செறியும் நிலை உணர்த்தி "நாடென்ப நாடா வளத்த" என்ற நிலையை விளக்கிவிட்டார். இவ்வாறே, பல்வேறு புலவர்களும். தாம் தாம் பாடவந்த புரவலர்களைப் பாடும்போதும், மாற்றார் நாடுகள் நிலைகெட்டபோதும் அவரவர் நாடுகளின் ஏற்றத்தைப் பாடியமை கண்டு தானோ வள்ளுவர் தன் நாட்டிற்கு இலக்கணம் வகுத்தார் என்று எண்ணத்தக்க வகையில் சிறப்பித்துள்ளார். விரிப்பிற் பெருகும்.

ஈண்டு வள்ளுவர் அரசியற் கருத்துக்களுடன் சங்க கால அரசியற்கருத்துக்கள் இயைந்துள்ளவற்றுள் ஒரு சில காட்டினேன். மன்னன் முறை செய்யும் திறன், அவனைச் சேர்ந்தொழுகுவார் செயல், அவன் நட்பு நெறி, ஒற்று, தூது பற்றிய விளக்கங்கள் அனைத்தையம் ஒப்பு நோக்கிக் காணின் அது ஒரு பெருநூலாக அமையும் எனக் கருதி இந்த அளவோடு அமைகின்றேன். எனவே, இக் கட்டுரை எடுத்த தலைப்பை முற்றக் காட்டியது எனக் கொள்ள இயலாது என்பதையும் கூறித்கொள்கிறேன்.

இங்கு, இக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த மதுரைப் பல்கலைக் கழகத்துக்கும், அதன் துணை வேந்தர் அவர்கட்கும், திருக்குறள் ஆய்வுத் துறைக்கும், இக் கருத்தரங்கின் செயலருக்கும் என் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். வணக்கம்.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/132&oldid=1358508" இலிருந்து மீள்விக்கப்பட்டது