பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

129


"நாடென்ப நாடா வளத்தன? நாடல்ல

நாட வளந்தரு நாடு"
(குறள்-739)

என்றும்,

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு"
(குறள்-731)

என்றும்,

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு"
(குறள்-734)

என்றும் கூறியுள்ளார். இத்தகைய நாட்டு நலன்களையெல்லாம் புறப்பாடல்கள் மட்டுமன்றி, அகப் பாடல்களிலும் நிரம்பக் காணலாம்.

"விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கை
தடமருப் பெருமை தாமரை முனையின்
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்

குடநாடு"
(அகம்-91)

என்று மாமூலனார் அகத்தில் காட்டியுள்ளார். பாரியொடு வதிந்த கபிலர் அப் பாரியின் நாடு மூவேந்தரால் எத்தனை நாட்கள் முற்றுகை இடப்பெறினும், நாடாவளம் வாய்ந்ததாகலின், அவர்களால் வெல்ல முடியாது எனக் காட்டுகிறார். பறம்பு நாட்டு இயற்கை நிலையை எண்ணிக் களி துளும்பிய உள்ளத்தொடு அவர்,

"உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுகளைப் பலவின் பழமூழ்க் கும்மே

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்குவீழ்க் கும்மே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/131&oldid=1358497" இலிருந்து மீள்விக்கப்பட்டது