பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழர் வாழ்வு


என்ற அளவே பரிமேலழகர் இக் குறட்பாவிற்கு உரை காணினும் இதனினும் மேம்பட்ட செம்மைப் பொருளில் இது சிறக்கின்றது எனலாம். இக் கருத்தினையே,

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"
(நற்-355)

என்ற நற்றிணை அடிகள் நன்கு விளக்குகின்றன. "நஞ்சும் உண்பர்" என்பதற்கு 'நஞ்சுண்டமைவர்' என்ற குறளின் தொடரே பாடமாக உண்டெனவும் சிலர் கூறுவர். எப்படியாயினும் குறளும், நற்றிணையும் இந்த உயர்ந்த பண்பினைச் சிறப்பா க மன்னர் மேலேற்றிக் கண்ணோட்டம் என்ற இந்த அடிப்படையில் வாழ்ந்தாலன்றி உலகம் வாழாது என்று வரையறுத்துக் கூறிக் காட்டுகின்றனவன்றோ? "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையால் உண்டிவ் வுலகு" (குறள்-571) என்பது உண்மையன்றோ?

இவ்வாறு இன்னும் அரசியலில் வரும் காலம், இடன், வலி முதலியனவற்றை அறிதல் பற்றியும், பிற தலைப்புக்கள் பற்றியும், அங்க இயலிலும் பிறவற்றிலும் அரசரைச் சார்ந்து வரும் பண்புகள் பற்றியும் படைச் செருக்கு முதலிய அரசற்கு இன்றியமையாச் சிறப்புக்கள் பற்றியும் ஆராயப்புகின் எல்லையற்றுப் பெருகிக்கொண்டே போகும். ஆயினும் கால எல்லை கருதி இந்த அளவோடு அமையக் கருதுகின்றேன். வல்லார் பல்லோர் உள்ள அவையில் எல்லை மீறி, அவர்கள் அறிந்தவற்றை அளவுக்கு மீறிப் பேசிக்கொண்டிருத்தல் 'நாகரிக' மன்றே! எனினும் முடிக்குமுன் இவ் அரசியலுக்கே அடிப்படையான 'நாடு' பற்றி மட்டும் ஒரு சில கண்டு அமையலாம் எனக் கருதுகின்றேன்.

திருவள்ளுவர் 'நா டு' ப ற் றி க் கூறும்போது அங்கவியலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/130&oldid=1358490" இலிருந்து மீள்விக்கப்பட்டது