பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

127


னாகவும் தோற்றமளிக்கும் மன்னரைப் பலர் பாடியுள்ளனரன்றோ? ஒருசிலர் பகைவருக்குத் தண்ணளி செய்த சிறப் பினையும் காண்கின்றோம்.

"பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி

ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மால்"
(பதிற்-37)

என்று களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காப்பியாற்றுக் காப்பியனாரால் பாராட்டப் படுகின்றன னன்றோ?

இனிக் கண்ணோட்டம் என்ற த ன் மை யை க் காண்போம்.

"கண்ணோட்டத் துள்ளது உலகியல்" என்று காட்டி வள்ளுவர் அக் கண்ணோட்டமே நாகரிகம் என்ற கருத்தில்,

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்"
(குறள்-580)

என்று கூறுகிறார். "நாகரிகம் வேண்டுபவர்" என்பதற்கு "விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்" என விளக்கம் தருகிறார் பரிமேலழகர். உற்றார் என உளத்தால் நினைத்தவர் நஞ்சினையே கொடுப்பினும், அவர் மேல் ஐ யு றா து, அதை உண்டு வாழ்தல்—சாதலன்று—கண்ணோட்டம் என்பது வள்ளுவர் கருத்து. இதன்வழியே, வள்ளுவர் நம்பிக்கை அடிப்படையை நெகிழ்த்தலாகாது என்பதையும், ஐயந்தீர்க்கும் உபாயங்களான் ஆய்ந்து, 'தவறு செய்யமாட்டார்' என்று முற்றும் நம்பியவரிடம் மறுபடியும் மன்னர் ஐயம் கொள்ளலாகாது என்பதையும் காட்டுவதோடு, அந்த எண்ணம்—திண்மை—சாகடிக்கும் ஆற்றலுடைய விடத்தினையும் பயனற்றுச் செய்துவிடும் என்ற உண்மையையும் விளக்குகிறார். பிறர் குற்றத்தைப் பொறுக்கும் பண்பினை இது குறிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/129&oldid=1358928" இலிருந்து மீள்விக்கப்பட்டது