பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழர் வாழ்வு


என்ற வள்ளுவர் வாக்கிலும் ஒரு படி மேலாகச் சென்று காக்கைப்பாடினியார், வீரத்தொடு போரிட்டு மடிந்த மகனைக் கண்டு பெரிது மகிழ்ந்த தாயினத்தை எண்ணி,

"படுமகன் கிடக்கை காணுஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே"
(புறம்-278)

என்று பாடுகின்றார். அப்படியே,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
(குறள்-110)

என்ற குறளுக்கு ஆலத்துார் கிழார் விளக்கம் தந்து (புறம் 34), குறளையே 'அறம்' எனக் காட்டி, "அறம் பாடிற்றே ஆயிழை கணவ" எனப் போற்றவில்லையா? இவை இரண்டும் அரசியலைச் சார்ந்த குறட்பாக்களின்றேனும் வீரச் செயலும் நன்றி உணர்வும் அரசர்கட்கு இன்றியமையாப் பண்புகளானமையின் ஈண்டுச் சுட்டிக் காட்டினேன்.

இனி,

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்"
(குறள்-186)

என்ற குறள் கருத்தை ஒட்டிப் பல கருத்துக்கள் காணப் பெறுகின்றன. காட்சிக்கெளியனாக மட்டுமன்றிப், புலவர் வாய்ச் சொல்லுக்கிரங்கி, அவருக்குக் கவரி வீசிய காவலனையும் (புறம் 50) காணுகின்றோமே. "இல்லோர் ஒக்கல் தலைவன்" (புறம் 95) எனவும், "சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன்" (பதிற் 86) எனவும் மன்னர் போற்றப்படுகின்றனரே! மாற்றாருக்குக் கூற்றுவனாகவும் அதே வேளையில் மற்றவருக்கு எளிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/128&oldid=1358472" இலிருந்து மீள்விக்கப்பட்டது