பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழர் வாழ்வு


போதிலும், நாட்டில் அரசின்றி நிலைகுலைந்தபோது மக்கள் தம் மன்னரைத் தேர்ந்தெடுத்த முறையினை நமக்கு இவ்வரலாறு தெரியக் காட்டுகிறதன்றோ? சோழன் கரிகாற் பெருவளத்தான் ஆட்சிக்கு வந்ததாகச் சங்ககாலச் செய்தி நமக்குக் கூறும் வகையில் இந்த வரலாறும் அமைகின்றது. நந்திவர்மனின் தந்தையாகிய இரணிய வர்மனும் அவனுடைய முதன் மூன்று மக்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்த அதே வேளையில், பன்னிரண்டு வயதே நிரம்பிய நந்திவர்மன் விரும்பி ஏற்று வெற்றி கண்ட சிறப்பு பல்லவர் வரலாற்றின் சிறந்த பகுதியாகும் அவனுடைய செயல்திறனே பல்லவர் மரபினை நாட்டில் மேலும் ஒரு நூற்றாண்டிற்கு வாழ வைத்தது. இவ்வரலாற்றைத் திரு. கோபாலன் அவர்கள் ‘Dynamic Revolution’ என்ற தலைப்பில் காட்டியுள்ளமை பாராட்டற்குரியது.

சிம்ம விஷ்ணுவுக்கு முன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவர் முறைமுறையாக ஆண்ட மரபு நெறி நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட சிம்மவிஷ்ணுவுக்கு முன் சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆண்ட அந்த மரபினரின் வரிசையை நம்மால் முற்றும் உணர முடியவில்லை. அவர்களே தொடர்ந்து அந்த நூற்றாண்டுகளில் காஞ்சியைக் தலைநகராகக் கொண்டு ஆண்டார்களா அன்றி வேற்று வேந்தர்களால் அடிக்கடி இடையீடுற்று இடம் மாற ஆண்டு வந்து மீண்டும் மீண்டும் தலையெடுத்தார்களா என்பதனைச் சிறந்த வரலாற்றாளரும் ஆய்ந்து உணர முடியவில்லை. அக்காலத்திய கல்வெட்டுக்களோ இலக்கியங்களோ பிற நாணயங்கள் முதலியனவோ வரலாற்று அடிப்படைப் பொருள்களை வகைப்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பல்லவர் மரபு அந்த மூன்று நூற்றாண்டிற்கும் இடையில் தொடங்கி ஒன்பதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/146&oldid=1359088" இலிருந்து மீள்விக்கப்பட்டது