பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

155


உணர்வு பெற்றுத் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ற பல செயல்களைச் செய்தார்கள் எ ன க் காண்கிறோம். இரண்டாம் பரமேசுவரனுக்கு அடுத்து வந்த இரணியவர்மனின் பரம்பரையினரான நந்திவர்மப் ப ல் ல வ ன் தொடங்கி அபராஜிதன் வரையில் நாட்டை ஆண்ட வரலாறு தெளிந்த நீரோடை போன்றே அமைகின்றது. எனவே அக்கால எல்லையிலமைந்த அரசர்களைத் தனித் தனியாக எடுத்து ஆய்வதோ அன்றிச் செயல்களை அறுதியிடுவதோ ஈண்டுத் தேவை இல்லை என எண்ணுகிறேன். அவர்களைப் பற்றி எல்லாம் முன் ஆய்ந்த வரலாற்று அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். எனவே அந்த உண்மைகளை நானும் இங்கே திருப்பிச் சொல்வ்து தேவையற்றது.

இப்பல்லவர் காலத்துக்கும் முற்காலப் பல்வலர் காலத்துக்கும் உ ள் ள ஒ ற் று மை வே ற் று மை களைக் கண்டு, இப்பல்லவர் காலத்திய சமுதாய வரலாற்றினை ஓரளவு விளக்கிக் காட்டி என் பணியை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். அக்காலத்திய சமயம், இலக்கியம், கலை ஆகியவை பற்றி ஆராயத் தனித் தனியாக அறிஞர் கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றமையின் அவற்றுள் புகுந்து துருவி ஆராயவேண்டிய தேவையும் இல்லை என்று கருதுகிறேன். எனவே மேற்போக்காகப் பல்லவர் கால வரலாறு நமக்குக் காட்டும் ஒரு சில உண்மைகளைக் கண்டு அவற்றால் தமிழ் நாடு பெற்ற பயன்களையும் மாறுதல்களையும் பிறவற்றையும் காட்டல் போதுமானதாகும்.

தமிழ்நாட்டில் முதற் பல்லவர் ஆட்சி மாற்றங்களைச் செய்தது என்றால் பிற்காலப் பல்லவர் ஆட்சி அம் மாற்றங்களை மாற்றி நிலைத்த பல பணிகளையும் செய்துள்ளது. மகேந்திரன் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய உடனே நாட்டில் பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/157&oldid=1358983" இலிருந்து மீள்விக்கப்பட்டது