பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

157


பாடலும் உருவாயிற்று. விநாயகர் வழிபாடு இன்றும் மேலைச் சாளுக்கியர் ஆண்ட மராட்டியப் பகுதிகளிலும் பம்பாயிலும் பிறவிடங்கனிலும் மிகச் சிறந்த முறையில் விரிந்த வகையில் கொண்டாடப் பெறுவதறிகிறோம்.

பரஞ்சோதியார் விநாயகரை ஏன் கொண்டுவந்தார்? அதனை அரச மரத்தின் கீழ் ஏன் நிறுவினார்? அரச மரத்துக்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பு என்ன? பெளத்த சமயக் கா ல த் தி தமிழ்நாட்டில் புத்தரை அ ரு ளா ள ரா க அ ர ச மரத்தடியில் அவருடைய பேருருவங்களை நிறுத்தி வழிபட்டனர். அடுத்து வந்த சமணர்களும் தம் சமயத் தலைவர்களை, மக்கள் மணமறிந்து, அதே நிழலில் நிறுவி வழிபட்டிருக்கக் கூடும். அசோகு அவருக்கு அருந்துணையாக அமைந்ததன்றோ! அதே வேளையில் வாதாபியில் விநாயகரின் பேருருவைக் கண்ட பரஞ்சோதியார் இந்த விநாயகர் பேருருவை அரச மரத்தின் கீழ் நிறுத்தின் மக்கள் மன நிறைவு பெறுவர் எனக் கணித்து இங்கே கொண்டு நிறுவி விட்டார். மக்கள் அன்று மன நிறைவு பெற்றதோடு, என்றும் அவ்விநாயகரையே முதல் வழிபடு கடவுளாகக் கொண்டுவிட்டனர். எனவே பரஞ்சோதியார் அரசியல் வெற்றி மட்டுமன்றித் தம் சமயக் கொள்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை இவ்வரலாறு காட்டுகிறது. இப் பிள்ளையாரைப் பற்றித் தமிழ் இலக்கியத்திலேயே முதன்முதல் பரஞ்சோதியாரின் காலத்தவரான ஞானசம்பந்தர்தாம் பாடுகின்றார்.

இவ்வாறு சமய அடிப்படையில் எத்தனையோ மாற்றங்கள் நடைபெற்றன. அவற்றுள் பெரும்பாலானவை இன்றளவும் வாழ்கின்றன. கலையுலகில் பிற்காலப் பல்லவர் செய்த புரட்சியே பெரும் புரட்சி ஆகும். யாரும் நினைத்தறியா வகையில் குகைக் கோயில்களைப் பல வகையில் வளர்த்து, கற்கோயில்களை அமைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/159&oldid=1359015" இலிருந்து மீள்விக்கப்பட்டது