பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

தமிழர் வாழ்வு


அங்கமிருந் தாராய்ந்து புலவ ரெல்லாம்
தாயேகின் பெரும் புகழைத் தரணிக் கீந்தார்
பொங்குபெரு வங்க மிசை போகி அந்நாள்
பொருள் வளர்த்த வணிகருமே பொருளாக்கொண்டனர்
எங்குமுன தின்னெழிலே இனிமையாக
இயைந்திருந்த அந்நாளே யாக இந்நாள்
மங்களமாய்க் கண்டுதமிழ் வாழ்வு போற்றி
மண்மீதில் வாழ்கின்றேன் மகிழ்வாய் அன்னாய் (3)

கண்டனைய தமிழ் மொழியே எங்கும் ஓங்கிக்
கருத்துடைய உலகமொழி யாக நிற்கக்
கொண்டஒரு வேட்கைதனை முடிப்ப தல்லால்
குறைஒன்றும் எங்களுக்கு இல்லை அன்னாய்!
வண்டிசையில் தீங்குழலில் மகிழ்வில் இன்பில்
மலர்பொருளில் உட்பொருளாய் மன்னி நின்றாய்!
அண்டிடுவோர் இன்பநலம் பெறுவ தன்றி
அருகிருப்போர் அவருடனே அன்பு சேர்வர் (4)

உன்வளர்ச்சி உன்னுவதே என்றன் இன்பம்,
உன்புகழைப் பாடுவதே என்றன் வேட்கை;
மன்னவரும் அடிபடிந்து போற்றச் செய்து
மன்னுலகில் உன் பெருமை நிலவ வைப்போம்;
உன்இனிமை கேட்பதுவே உவகை எந்தாய்
உயர்விதன்மேல் உண்டேயோ? உலகையெல்லாம்
உன்தமிழாய் ஆக்குமொரு நள்னாள் இங்கே
உற்றிடுதல் காணுவதே உளத்து வேட்கை! (5)

(1939-இல் தமிழ்க் கலையில் வந்தது)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/182&oldid=1423798" இலிருந்து மீள்விக்கப்பட்டது