பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகத் தேற்றமும் லெமூரியா நாடும்

179


விளக்கங்களையும் அறிஞர் பலர் காட்டியுள்ளனர். உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கே கூடியுள்ள பேரறிஞர்களாகிய நீங்கள் அனைவரும் தத்தம் நாடு சென்றபின் பல்வேறு வகைகளில் ஆராய்ந்து இதன் உண்மை விளக்கங்களையும், அதன் பங்காக இருந்து இன்று வாழும் தமிழகத்தின் தனிச் சிறப்பினையும் கணித்து, வடித்து. அடுத்த மாநாட்டில் கொண்டுவந்து தெளிய வைக்க, வேண்டுமெனக் கேட்டு, அனைவரையும் வணங்கி விடை, பெறுகின்றேன்.

வாழ்க தமிழ்; வளர்க தமிழினம்!

எனது வேட்கை

முன்னொரு நாள் உலகமெலம் முகிழ்த்து நின்ற
மொழியென்று வல்லுநர்கள் மொழியும் செல்வி
உன்மைந்தர் இன்றிங்கே நின்றே போற்ற
உயர்வழியே தனைக்காண உழைப்போம் அன்னாய்
பொன் பெற்று நின்றாலும் அன்றி மற்றிப்
புவியாவும் உடன் சேர்ந்து புரண்டிட் டாலும்
என் பெற்ற தமிழ்த்தாயே உன்னைப் போற்றி
இன்பநிலை தனை அடைய எண்ணி னேனே. (1)

மூவுலகும் சன்மானம் எனவே ஈந்து
முதலான பெரும் பதவி முன்னின் றாலும்
காவலனாய் நின்றிடவே கணித்திட் டாலும்
கற்பகக்கோன் தன்பதமே தந்திட்டாலும்
யாவுலகும் என் அடிக் கீழ் நின்றிட் டாலும்
இவையெல்லாம் எண்ணாது எந்தாய் உன்றன்
பூமலராம் தமிழ்ப்பாதம் போற்றல் செய்யும்
பொற்றொழிலே ஈற்றொழிலாய்ப் போற்று வேனே. (2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/181&oldid=1423799" இலிருந்து மீள்விக்கப்பட்டது