பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழர் வாழ்வு


செவிவாரணம் முன் சமம் முறுக்கிய புறஞ்சிறை வாரணம்' என்னும் பகுதி முற்றிலும் உண்மை என்பதை விளக்கியே 'இளங்கோவடிகள் பொய் சொல்லவில்லை' என்ற கட்டுரையை அன்றைய நாளிதழ் ஒன்றில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் வெளியிட்டேன்.

'யானையைக் கோழி வெல்லுமோ' என்பதே கேள்வி. வென்றது 'என்பதே முடிவு. அந்த நாளில் நாளிதழில் திட்ட வட்டமாக வெளிவந்த செய்தியே இது. 'செக்' நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஒரு விமானத்தில் யானையை ஏற்றிச் சென்றனர். விண்ணில் பறந்து போது, யானை மதம் பிடித்து அங்கும் இங்கும் அசைய விமானமே நிலைகுலையும் நிலை ஏற்பட்டது. அப்போது பக்கத்தில் இருந்த கூடையிலிருத்து வெளிவந்த ஒரு சேவல் பறந்து யானையின் மத்தகத்தில் உட்கார்ந்தது. உடனே யானை அடங்கி நின்றது. அனைவரும் அதிசயித்தனர். பின் சேவலை அகற்ற மறுபடியும் யானை மதத்துடன் ஆடிற்று. மறுபடி சேவலை ஏற்ற அது அடங்கிற்று' இது பொய் அன்று. அவ்விமான எண், நாள், செல்லுமிடம் அனைத்தும் நாளிதழில் (இந்து என எண்ணுகிறேன்) வந்தன. இது பற்றிய என் கட்டுரையும் என் தொகுப்பு நூல் ஒன்றில் உள்ளது. அதில் பத்திரிகையின் பெயர்—நாள் அனைத்தும் உள்ளன. வேண்டுபவருக்கு அதன் படி அனுப்பவேன்.

எனவே இளங்கோவடிகள் கூற்றும் நில ஆய்வாளர் முடிவும் குமரிக்கண்டம் இருந்தது என்பதையும் அது ஒன்றுக்கு மேற்பட்ட கடல் கோள்களால் அழிவுற்றது என்பதையும் நிலை நாட்டுகின்றன. அண்மையில் உரிமை பெற்ற இச்ரவேல் நாடு இயேசுவின் வாழ்வினை ஒட்டிய பல இடங்களை ஆராய முற்பட்டுப் பலவற்றைக் கண்டுள்ளது. நம் நாடும் அந்த வகையில் குமரிக்கண்டத்தைப் பற்றி அகழ்வாய்வு செய்யின் நிச்சயம் உடன் பலன் கிட்டும். செய்வார்களா? குமரிக்கண்டம் பற்றியும் அதுபற்றிய பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/180&oldid=1358589" இலிருந்து மீள்விக்கப்பட்டது