பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகத் தோற்றமும் லெமூரியா நாடும்

177


இவ்வாறு பரந்த அண்ட கோளத்தில் அமைந்த ஓர் உருண்டையான நம் உலகம் தோன்றிய நாள்தொட்டு எத்தனை எத்தனையோ மாற்றங்கள் அடைந்துள்ளன. அவற்றுள் ஒன்றே மறைந்த குமரிக்கண்டம். இதோ நாம் கூடியுள்ள இந்த 'மொரிசியசு' தீவினை உள்ளடக்கிய கிழக்கே ஆஸ்திரேலியா தொடங்கி மேற்கே மடகாஸ்கர், தென் ஆப்பிரிக்கா வரையில் பரந்துகிடந்த குமரிக் கண்டத்தைப் பற்றியே இன்று மாண்புமிகு மகாலிங்கம் அவர்கள் வழியே கேட்க இருக்கின்றோம். அந்தப் பழம் பெரு நாட்டின் ஒரு பகுதியாகிய இந்த மண்ணில் நிற்கின்ற பெருமிதத்தோடு எனது த லை மை உரையினை முடித்துக்கொண்டு அவர்களைத் தம் ஆய்வுக் கட்டுரையினைப் படிக்க உங்கள் அனைவர் சார்பிலும் வேண்டிக் கொள்கிறேன்.

(பின் மாண்புமிகு மகாலிங்கம் அவர்கள் குமரிக் கண்டம் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரையினைப் படித்து முடித்தார்கள்.)

முடிவாக அவர்கள் கருத்தினை ஒட்டி இரண்டொன்று சொல்லி அமைகின்றேன். குமரி, அழிவு பற்றிச் சிலம்பின் அடிகளைக் காட்டினார்கள்.

'வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி !'

என்ற மதுரைக் காண்டத் தொடக்க அடிகளைச் சுட்டிக் காட்டினார்கள். இது பொய்யாக இருக்குமோ எனச் சிலர் ஐயுறலாம். ஆயினும் இளங்கோவடிகள் பொய் சொல்லவில்லை என்பது என் கருத்து. இதே தலைப்பில் இவ்வடிகளுக்கு முன் வந்தசில அடிகளில்—புகார்க் காண்ட இறுதி அடிகளில் 'இளங்கோ' கூறியுள்ள 'முறஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/179&oldid=1358600" இலிருந்து மீள்விக்கப்பட்டது