பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழர் வாழ்வு


மனிதப் பிறவிக்கு முன் 'கல்' எப்படி அமையும் என்று பல நாள் நான் உண்ணியதுண்டு. இதுபற்றிப் படம் வரைந்து 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சென்னைப் பல்கலைக்கழக 125-ஆம் ஆண்டுவிழாவின் கண்காட்சியில் வைத்தேன்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு வந்த பேரறிஞர் துணைவேந்தர் ஆ. இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் இதையும் பார்த்தார். நான் அவரிடம் இந்தக் 'கல்' நிலை பற்றி கேட்டேன். அவர் அது முற்றிலும் உண்மையென்றும் அது பாறைப்படிவமாகிய 'Fossil' என்றும் கூறி என்னை வாழ்த்தினார். (It is perfectly alright; it is the Fossil stage—Said Dr.A.L.Mudaliar) 1985-இல் நியூயார்க் நகரில் உள்ள பெரும் பொருட் காட்சிச் சாலையில் இந்த விளக்கம் அப்படியே விளக்கிக் காட்டப் பெற்றது (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பக். 135, 136) கண்டு வியந்து மூன்றாம் நூற்றாண்டிலே இதை உணர்ந்து பாடிய மணி வாசகரைப் போற்றி வணங்கினேன். அண்மையில் வெளிவந்த உருசியா நாட்டு (Russia) அறிஞர் V. P. Alaxeu எழுதி மாஸ்கோ புரோகிரசிவ் பதிப்பகத்தார் வெளியிட்ட "The origin of the Human race (Traslated into English by H. Campwell geiy iston) என்ற நுாலில் இப் பாறைப்படிவம் பற்றிப் பல பக்கங்கள் விளக்கமாக எழுதி, மனித +வாழ்வோடு அதைப் பிணைத்திருக்கிறார். இது பற்றிய அவர் ஆய்வு முப்பது லட்சம் ஆண்டுகள் வரையில் செல்கிறது.

'Fossilised forms of man is oldest ancestors. Human Society is regarded as a definite social and natural state in the development of all matters of Universe, comparable with the preceeding stages of evelution of matter and its form of motion (p. 61) என்பது அவர் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/178&oldid=1423803" இலிருந்து மீள்விக்கப்பட்டது