பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகத் தோற்றமும் லெமுரியா றாடும்

175


இவற்றுள் கடைசிப் பேருழி 12,000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது என்று இன்றைய ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அந்தப் பேருழியிலும் அதற்கடுத்த சில ஊழிகளிலும் அழிந்ததே குமரிக் கண்டம்!

இந்த உலகில் மனிதன் கடைசியாகத் தோன்றியவன். அதற்கு முன் முதலாவதாக நீரில் உயிர் தோன்றிற்று. அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர் தோன்றி வளர்ந்த வகையில் பல மேலை நாட்டு அறிஞர் இன்று ஆய்ந்துவருகின்றனர். அவ்வுயிர்த்திரள் அணுவுக்குச் சிறியதாய் 'அணுவைச் சதகூறிட்ட கோனி'னும் சிறிதாய்ப் பல கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் கழிய, பின் நீரில் உயிர் தோன்றிற்று. பின் பல கோடி ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிய நீரிலும் நிலத்திலும் ஆமை போன்ற உயிரினம், பின் நிலப்பன்றி, பின் விலங்கும் மனிதனும் கலந்த நரசிம்மன், பின் வஞ்சக மிருக உணர்வோடு கூடிய வாமனன், பின் பழி உணர்வுடைய மனிதன் (பரசுராமன்), பின்நிறைநலமுடைய மனிதனாகிய இராமன் என நின்று, மறுபடியும் இன்றை ஆக்கப்பொருள்களை அழிவுக்குப் பயன்படுத்தும் பரசுராமன் — அவன் இளையவன் கண்ணன் — கடைசியாக பேருழியில் உலகம் அழியக் காட்டும் கல்கி என இவ்வுயிர்த் தோற்ற வளர்ச்சியை — பரிணாம வளர்ச்சியைத் தசாவதாரமாகக் காட்டுவர் பெரியோர். மாணிக்க வாசகர் இந்த வளர்ச்சியினை,

"புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமாள்"

எனக் காட்டுவர். இதில் யாவும் சரியாக இருப்பினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/177&oldid=1423927" இலிருந்து மீள்விக்கப்பட்டது