பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழர் வாழ்வு


இன்பமேது? அப்பெண்களிலும் மணம் வேண்டாம் என வாழும் பெண்கள் மேலானவர்களே!

பெண்மை தியாகத்தின் சின்னம் என்பதை மறுப்பார் யாரே! அவளின்றேல் அவனியில் உயிர்த் தோற்றம் இல்லை என்பதை முன்னமே கண்டோமல்லவா! ஆடவனும் தியாகத்தின் அடிப்படையில்தான் வாழ்வை அமைத்துக் கொள்கிறான் என்றாலும் பெண்மையின் தியாகத்தின் முன் அவன் தியாகம் மிகச் சிறியதாகிவிடும். தான் பெறும் இன்பத்தின் பொருட்டென்றாலும், அவள் தன்னினும் கணவன் இன்பமே பெரிதாகக் கருதித்தான் அவன் விருப்பு வெறுப்பு இரண்டிற்கும் உட்பட்டு வாழ்கின்றாள். இந் நியதி இன்றளவும் பிறழா நியதியாகவே உள்ளமை கண்கூடு.

கணவனுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்வது ஒரு புறம் இருக்கட்டும். கணவன் வழி அவள் பெற்றெடுக்க நிற்கும்-பெற்றெடுத்துப் பேணி வளர்க்கும் பெருஞ் செல்வமாகிய மக்கட் செல்வத்துக்காக அவள் செய்யும் தியாகம் எத்தகையது. உலகம் அதை எண்ணிப் பார்த்ததுண்டா? கருவுண்டான நாள்தொட்டு பத்து மாதங்களும் திங்கள் தோறும் நேரிடும் மாறுதல்களுக்கெற்பத் தன் வாழ்க்கை வசதிகளையும் பிற தேவைகளையும் மாற்றியும் குறைத்தும் எவ்வெவ்வாறு தியாகம் செய்ய வேண்டியுள்ளது. குழந்தை பிறந்து விட்டாலோ அவள் முழுத் தியாகியாகி விடுகின்றாள்.

குழந்தையின் வாழ்வே தன் வாழ்வென உணரும் தாயுள்ளத்தில்தான் இந்த 'உலகம் உயர்ந்தது-அது வாழ வேண்டும்' என்ற தாய்மையும் அரும்பும். எனவே உலகைப் 'பால் நினைந்துாட்டும் தாயாகப்' பாதுகாப்பதே பெண்மை ஒன்றுதான். பெற்ற குழந்தை நோயுற்றால் தான் மருந்துண்டு-அது வாடினால் தான் வாடி- அதன் வாழ்வே தன் வாழ்வு என்று கொள்ளும் நோக்கும் செயலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/42&oldid=1358257" இலிருந்து மீள்விக்கப்பட்டது