பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

39



காய்சின மிலாளுமாய் நோய்வழி யிலாததோர்
கால்வழியில் வந்தவளுமாய்
மணமிக்க நாண மடம் அச்சம் பயிர்ப்பென்னும்
வருமினிய மார்க்க வதியாய்
மாமிமாமர்க் கிதம் செய்பவளுமாய் வாசல்
வருவிருந் தோம்பு பவளாய்
இணையில் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய்
வந்திஎன் பெயரிலாத வளுமாய்
இரதி யெனவே லீலை புரிபவளுமாய்ப் பிறர்தம்
இல்வழி செலாதவளுமாய்
அன்னியிழை ஒருத்தி யுண்டாயினவள் கற்புடைய
ளாகு மெம தருமை மறவேள்
அனுதினமு மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.

என்பது அறப்பளீசுரர் சதகம். இப்படியே எத்தனையோ புலவர்கள் பெண்ணின் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டிச் சென்றுள்ளனர்.

"வேசி துயிலும் விறன்மங்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண்"

என்ற பாடலும் பெண்ணின் பண்புநலத்தைப் பாட வந்ததேயாகும். ஆம்! கொண்ட கணவன் தன்னிடத்தில் எ ந் த வகையான குறையையும் காணாதபடி நடந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் இ தை க் குறை கூறுவதும் கேட்கிறது. கணவன் எப்படி இருந்தாலுமா? என்று கேட்கிறார்கள். அதுவும் எண்ணத்தான் வேண்டும். பல பெண்களின் நல்வாழ்வு தம் கணவர்தம் நேர்மையற்ற வாழ்வாலேயே மங்குவதையும் காண்கின்றோம். ஆயினும் அத்தகைய கணவரைத் திருத்த வேண்டிய பொறுப்பு அக்கற்புடைய மங்கையரையே சாரும் என்பது மட்டும் உண்மை. அவன் மாறுபட்டால் தானும் மாறுபடுவது எனத் தொடங்கின் பிறகு இல்லற வாழ்வேது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/41&oldid=1358253" இலிருந்து மீள்விக்கப்பட்டது