பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழர் வாழ்வு


எனக் காட்டுகின்றார். க ண வ னு க் கு மனைவியாக அமையும் பெண் அதே தலைவனுக்கு என்னென்ன வகையில் எவ்வெவ்வாறு பணி புரிந்தும் உடனின்று உதவியும் உற்றுழி கை கொடுத்தும் வாழ வைக்கின்றாள் என்பதைக் காண முடிகின்றது. தாயன்பாம் தலையன்பால் கணவனை அணைக்கிறாள். உடன் பிறந்தவளாகவும்- ஏன்? - மகளாகவும்கூட மகிழ்விக்கின்றாள். இந்த நிலை எண்ணிப் பார்க்க முடியாத பெ ரு நிலைதான். ஏன்? - சிலர் எள்ளியும் நகையாடக்கூடியது எனவும் கூறுவர். பாவம் அவர்கள் அப்பாவிகள். அத்தகைய இன்ப நுகர்ச்சிகளை அவர் தம் வாழ்வரசியிடமிருந்து பெறத் தவறியவர்கள் என்று அவர்களை ஒதுக்கிவிடலாம்.

இந்த அடிப்படை உண்மையை அமைத்தே பிற்காலத்து வந்த வேறு பல புலவர்கள் பெண்மை எவ்வெவ்வாறு தன் கடமையைப் புகிகின்றது எனக் காட்டுகின்றனர். ஒரே பெண் எத்தனை எத்தனை வாழ்வு நிலைகளில்—எத்தனை எ த் த னை கோணங்களில்— எத்தனை எத்தனை ஏற்றத்தோடு வாழ்வினை அமைத்துக் கொள்கிறாள் என அ ப் பு ல வ ர் க ள் பாட்டிசைக்கிறார்கள். பலப்பல கோணங்களில் தம் உடலின் எல்லாம் பாகங்களையும் புகைப்படத்திலும், திரைப்படத்திலும் தம்மைக் காட்டிக் காசு பறிக்கும் காரிகையாருக்கும் அக்காட்சிகளைக் காண மந்தை மந்தையாகச் செல்லும் காரிகையாருக்கும் இவையெல்லாம் புரியாதவைகளாக இருக்கலாம். ஆனால் பெண்மையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நல்ல குல விளக்கங்களுக்கு இன்னும் நாட்டில் பஞ்சம் உண்டாகவில்லையல்லவா! அவர்களை எண்ணியே சதகம் பாடிய அறிஞர்கள் பெண்மையின் தன்னலமற்ற தியாக உணர்வைப் பாட்டில் வடித்துத் தந்துள்ளார்கள். ஒன்று காணலாம்.

கணவனுக் கினியளாய் மிருது பாகூஷியாய் மிக்க
கமல நிகர் ரூபவதியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/40&oldid=1358249" இலிருந்து மீள்விக்கப்பட்டது