பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழர் வாழ்வு


வேண்டும் என்று நினைப்பது உண்டு. அவைகளை நான் சிட்டுக்குருவிகள் என அழைப்பதே இல்லை. வீட்டுக் குருவிகள் என்றுதான் அழைப்பது வழக்கம். என் வீட்டில் மட்டுமன்றி மக்கள் மனைதொறும் அவை வாழ்ந்து—அம் மக்களுக்கு அறிவுறுத்தும் எண்ணற்ற அறிவுரைகளைக் கூறாமல் கூறிக் கொண்டிருப்பதை எண்ணி எண்ணி மனிதன் மகிழக் கடமைப்பட்டவனாகின்றான். அவை ஆணும் பெண்ணும் எவ்வாறு கலந்து வாழ்கின்றன என்பதைக் கண்டவரே அறிவர். அவை துறவைப் பற்றி எண்ணுவதில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியாது வாழ்கின்றன. பெண் பிணங்குவதும் ஊடல் செய்வதும் பின் கூடி மகிழ்வதும் அவற்றிற்கு நன்கு தெரிந்தவையே. அவை இரண்டும் பெற்ற குஞ்சுகளைப் பேணி வளர்க்கும் பெருந்தகைமையும் சிறந்ததே. அவற்றைக் கண்டு மனிதன் தன் வாழ்வைச் செப்பம் செய்யக் கடமைப்பட்டவனாவன். சிறப்பாகப் பெண் அச் சிட்டுக்குருவியின் வழி அறிந்துகொள்ள வேண்டியன பல உள்ளன.

பெண் சமுதாயத்தொடு தொடர்பு கொள்ளுமுன் வீட்டுத் தனி வாழ்வின் தேவையை விளக்க இச் சிட்டுக் குருவியாகிய வீட்டுக் குருவியின் விளக்கம் மிக மிக இன்றியமையாது வேண்டப்படுவதாகும். கணவன் மனைவியராகிக் கலந்து வாழும் வாழ்க்கையில் மாறுபாடு உண்டாயின் கணவனைச் சன்னியாசியாகப் போகச் சொல்லுவர் சிலர்.

'பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்—சற்றேனும்
எறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்'

என்று ஒளவையோ யாரோ பாடியதாக ஒரு தனிப் பாடல் உண்டு. கணவன் ஏறுமாறாக இருந்தால் மனைவி என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/44&oldid=1358269" இலிருந்து மீள்விக்கப்பட்டது