பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

77


அறிவு இன்றேல் சிறவாது என்பதையும் சுட்டாமல் சுட்டுகிறார். தனிமனித வாழ்வாகிய காதல் வாழ்வில் மனிதன் தன்னை மறக்கவும் கூடும்; தரணியை எண்ணாது ஒதுக்கவுங் கூடும் எனக் கருதிய வள்ளுவர் அங்கே அதனைத் துய்க்க அவனை ஆற்றுப்படுத்தி, அதேவேளையில் அதனினும் மேலாகிய அறிவு நிலை திரியாதிருக்கவேண்டிய அறநெறியினையும் விளக்குகிறார்.

‘அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு’
(1110)

என்று புணர்ச்சி மகிழ்தலின் உச்சியில் – இறுதிப் பாட்டாக இதை வைத்துள்ளார். வைய வாழ்வாகிய காதலின்பத்தின் எல்லையில் இரண்டறக் கலந்து நிற்கின்ற அவர்கள், அதே வேளையில் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் கடமை உணர்வையும் அறிவையும் பெற வேண்டும் என்பது அவர் கருத்து. மேலும் இதில் அறிவின் எல்லை சுட்டப்பெறு கின்றது. இக் குறளுக்கு உரையாசிரியர்கள் அறிய அறிய முன்னைய அறியாமையைக் காண்டற்போல’ என உரை எழுதிப் பின்னதற்கு விளக்கம் காண்பர். தொல்காப்பியப் பொருளதிகாரம் 146 சூத்திரத்திலும் நச்சினார்க்கினியர் இதே வகையில் உரை காண்கிறார். எனினும் குறள் உரை கண்ட காளிங்கர் அறியுந்தொறும் ‘அறியுந் தொறும் மற்றது ஒழிந்த நன்னூலும் அவ்வாறு கற்று இனிது அறியப் பெறாமையாகிய விரும்புதல்’ என்று கூறிக்கழிந்த அறியாமை மட்டுமன்றி மேலே காணப்பெறாது நிற்கின்ற அறியாமையினையும் சுட்டுகிறார். காதல் வாழ்வாம் உவமேயமும் அப்படியேயாம். இந்தக் குறள் களவொழுக்கத்தில் முதல் முதலாகத் தலைவன் தலைவியைக் கூடும் நிலையில் கூறப்பெறுகின்றது. எனவே அறியாமை இனித் தொடர்ந்து அவர்மாட்டுத் தான் பெறும் இன்பத்தினையே அது குறிப்பதாகும். அப்படியே அறிவு தன்னை அறிய அறிய இன்னும் அறியாத பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/79&oldid=1356850" இலிருந்து மீள்விக்கப்பட்டது