பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது அறிவு?

79


பலவறறைக் காணும் அறிவைப் பெறுவான். ஆனால் அதே வேளையில் இன்னும் கண்ணாலே கர்ண முடியாத நெடுந்துாரம் அதிகமாக உள்ளமை அவனுக்குப் புலனா கின்றது. முன் தன் கண்ணால் ஐந்து கல் தொலைவு கண்டவன் சாதாரணத் தொலை நோக்கியால் ஐம்பது கல் காண்கிறான். (கல் என்பது எல்லையைச் சுட்டும் ஒரு சொல்லாகக் கொள்க). ஆனால் காணாததாக ஐந்நூறு கல் அவனுக்குத் தெரிகிறது. உடனே மற்றொரு பெருந் தொலை நோக்கி கொண்டு ஆராய ஐந்நூறு கல்லும் தெரிகிறது; ஆனால் தெரியாதது ஐந்தாயிரம் கல்லாக விரிகிறது. இப்படியே புதிது புதிதாகப் பலப்பல காணக் காண, காணாத நெடுந்தொலைவு விரிந்து பரந்து மிகப் பல வகையில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. வான வரம்பினை எட்டிப் பிடித்ததாக ஏமாக்கும் இன்றைய மனிதன் என்னதான் முயன்றாலும் என்றும் அண்ட கோளத்தை அளவிட்டோ அறுதியிட்டோ காண முடியாது. இதை விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டும் மெய்ப்பிக்கின்றன. அறிவும் இத்தகையதே. எனவேதான் வள்ளுவர் ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ எனக் கூறினார். இதனால் அறிவின் பரந்த நிலையினை ஒருவாறு நாம் அறிதல் கூடும். இப்பரந்த அறிவைப் பாரில் வாழ் மக்களொடு தொடர்புபடுத்தித்தான் அறிவுடைமை என்ற் அதிகாரத்தின் பத்துக் குறளையும் வள்ளுவர் எழுதினார். இனி, இந்த அறிவுடையான் செயலே சிறந்ததாகவும் தெளிந்ததாகவும் தேவைக்கு ஏற்றதாகவும் அமையும் என்பதை வள்ளுவர் பலவிடங்களில் சுட்டாமல் இல்லை.

அன்பு அறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு (513)

என்றும், .

அறிந்தாற்றின் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென்றேவற்பாற் றன்று (515)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/81&oldid=1356860" இலிருந்து மீள்விக்கப்பட்டது