பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நூல்-தமிழ் ஆசிரியர்-தமிழ் வரலாறு போன்றவற்றைத் தரவேண்டும். அரசுகள் வந்துவந்து செல்கின்றன. விழாக்கள் பலப்பல நடைபெறுகின்றன. ஆயினும் தமிழ் மண்ணில் தமிழை இரண்டாவது மொழியாய்-தமிழனை இரண்டாந்தர மனிதனாய் நினைக்கும்-செயல்படும் நிலை உள்ளது. இது தமிழர் வாழ்வு ஆகாது. தமிழக அரசும் மக்களும் தொல்காப்பியர்-சங்கப் புலவர் கண்ட தூய தமிழர் வாழ்வு தமிழகத்திலும் தரணியிலும் உயர உடனே செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக்கப்பெறல் வேண்டும்.

இந்த நூலில் உள்ள எட்டுக் கட்டுரைகளும் தமிழர் வாழ்வினைப் பலவகையில் விளக்குவனவே. எனவே இந்நூல் வருங்காலத் தமிழ்ச் சமுதாயத்துக்கு, பழங்காலத் தமிழ் சமுதாய வாழ்வைக்காட்டி, அது சிறக்க வழிவகுக்கும் என எண்ணி அமைகின்றேன்

இந்நூல் வெளிவரும்போது அச்சுப்பிழைகளை ஒப்பு நோக்கித் திருத்தி உதவிய பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் இரா. மாயாண்டி அவர்களுக்கு என் நன்றி உரித்து.


தமிழ்க்கலை இல்லம்,
சென்னை-30,
14-4-90
அன்புடன்,
அ. மு. பரமசிவானந்தம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/9&oldid=1423892" இலிருந்து மீள்விக்கப்பட்டது