பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

எத்தனை இலக்கியங்கள், வா ழ் க் கை வரலாறுகள் இருந்திருக்க வேண்டும் என்று ஓரளவு உணரமுடியும். அந்த நெடுங்காலந் தொட்டு இன்றுவரை - குமரிக் கண்டக் காலம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு இறுதிவரை வாழும் தமிழர்தம் வாழ்வை வரையறுக்க முடியாதுதான். எனினும் அக்கால முதல் தோன்றி வளர்ந்து -வாழ்ந்து வரும் இலக்கியங்களும் வரலாற்று மூலங்களும், கலை உருவில் பழம் பெருமை பாடும் கற்களும், இயற்கை, நெறிகளும் பிறவும் தமிழர் வாழ்வை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன அல்லவோ! எனவே அவற்றின் துணை கொண்டே தமிழர் வாழ்வை நான் காட்ட நினைத்தேன்.

தமிழ் செவ்வியமொழி-சொல்லாற்றலும் பொருளாழமும் கொண்டமொழி-வளர்ந்த உலகமொழிகளும் காணாவகையில் சொல்லும் பொருளும் சிறந்த மொழி. அந்த உண்மையினை விளக்குவதற்கெனவே பெ ண் மை, அறிவு, பண் போன்ற ஒரு சில சொற்களை எடுத்து ஆழங்காண முயன்றேன். முற்றும் கண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. இப்படியே அறன், வாய்மை போன்றவற்றிற்கும் உரைவளம் கண்டு விளக்கமுயன்றுள்ளேன். வாய்ப்புளதேல் பின்வரும் நூல்களில் இடம் பெறலாம்.

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்' என்று தமிழ்க் கவிஞன் பாரதிவிண்ட வேண்டுகோளைத் தமிழ்ச் சமுதாயம் ஏற்றுச் செயல்படவில்லை. 1985இல் உலகம் சுற்றிய நான் உலகெங்கணும் உள்ள தமிழார்வத்தை நேரில்கண்டவன். (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.) ஓரிரு இடங்களில், நன்றி கெட்ட தமிழகம் 'தாய்க் கொலைச் சால்புடைத்தென்பாரும் உண்டு' என்றபடி தமிழைக் கொலை செய்தாலும் இங்கெலாம் மங்காது தமிழ் வாழும் என மகிழ்கின்றேன் எனக் குறிப்பிட்டேன். ஆம்! தமிழகம் உலகில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் வாழ்வு-தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/8&oldid=1359135" இலிருந்து மீள்விக்கப்பட்டது