பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ் இன்பம்


அல்லன்; பிசிராந்தையார் என்னும் தமிழ்ப் புலவரையே உயிர் நண்பராகக் கொண்டான். அம்மன்னன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா நோன்பை மேற்கொண்ட பொழுது அவன் மனம் பிசிராந்தையாரை நாடிற்று. தோழர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்து ஆவி காத்திருந்தான் அவன்; எப்படியும் பிசிராந்தையார் வந்தே தீர்வாரென்று அருகே இருந்த அன்பரிடம் அகம் குழைந்து கூறினான்.

செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன்”

என்பது அந் நிலையில் அவன் பாடிய பாட்டு. இங்ஙனம் ஏங்கி நின்ற நல்லுயிர் நீங்கிப் போயிற்று. பிற்பாடு, ஆந்தையார் வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணா நோன்பிருந்து தம் உயிர்கொண்டு சோழன் நல்லுயிரைத் தேடச் செல்வார் போல ஆவி துறந்தார்.

சேர நாட்டை ஆண்ட மன்னருள்ளும் சிலர் செந்தமிழ்க் கவிபாடும் சிறப்பு வாய்ந்திருந்தனர். அன்னவருள் ஒருவன் சேரமான் இரும்பொறை. அம் மன்னன் செங்கண்ணன் என்ற சோழ மன்னனுடன் பெரும் போர் செய்து தோற்றான். வெற்றிபெற்ற சோழன் சேரமானைப் பிடித்துச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான். சிறையிடைத் தேம்பிய சேரன், ஒரு நாள் தாகமுற்று வருந்தினான்; தண்ணிர் தரும்படி சிறை காப்பாளனை வேண்டினான். அவன் காலம் தாழ்த்து, ஒரு கலத்தில் நீர் கொண்டுவந்தான். அத் தண்ணிரைப் பருகி, உயிர் வாழ்வதற்கு அம்மான வேந்தன் மனம்