பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் இன்பம்


பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கோடைமலைத் தலைவனாகிய கடிய நெடு வேட்டுவனைக் காணச் சென்றார். அவன், உரிய காலத்தில் பரிசில் அளியாது காலம் தாழ்த்தான். அது கண்ட சாத்தனார்,

"முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்டபின் றீதல் யாம்வேண் டலமே”

என்றார்; "கல்வியின் பெருமை யறிந்து பேணிக்கொடுக்கின்ற கொடையையே யாம் பெறுவோம். அன்பற்றவர், முடியுடை வேந்தராயினும், அவர் அளிக்கும் கொடையை ஏற்றுக்கொள்ளோம்” என்று கூறி அவனை விட்டு அகன்றார்.

பெருஞ்சித்திரனார் என்ற புலவர், ஒரு நாள் அதிகமானைக் காணச் சென்றார். அவன், புலவரை மதிக்கும் பெற்றி வாய்ந்தவனாயினும், அப்போது அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தானாதலால், புலவருக்குரிய பரிசிற் பொருளை மற்றொருவரிடம் கொடுத்தனுப்பினான். அப்பரிசைக் கண்ட சித்திரனார் சீற்றம் கொண்டார்; என்னை யாரென்று நினைத்தான் அதிகமான்? அவனைக் கண்டு பரிசு பெற வந்தேனே அன்றிப் பாராமுகமாக அவன் கொடுக்கும் பொருளைக் கொண்டு போக வந்தவன் அல்லேன் யான். பாட்டைப் பாடிவிட்டு, அதற்கு ஈடாகப் பரிசில் பெற்றுச் செல்பவன் வாணிகப் புலவன் ஆவான். அவ்வகையாரைச் சேர்ந்தவன் அல்லன் யான். கல்வியின் சுவையறிந்து அன்புடன், அரசன் தினையளவு பொருள் தரினும் அதனைப் பெரிதாக ஏற்று மகிழ்வேன் என்று உணர்ச்சி ததும்பப் பாடினார்.

இசைத் தமிழ் வளர்ச்சி

இயற்றமிழை ஆதரித்த பண்டைத் தமிழரசர்கள் இசைத் தமிழையும் நன்கு போற்றினார்கள். அக்