பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 —C தமிழின் சிறப்) கலையைவிடச் சிறந்த கலையில்லை என்பது பேராசிரியர் சம்பந்த முதலியார் அவர்களின் வாக்கு.

நாடக உலகம் ஒரு தனி உலகம், அங்கு ஏழையும் செல்வரும் இல்லை. அரசனும் சேவகனும், அமைச்சனும் பிச்சைக்காரனும் திரைக்குப் பின்னே கைகோத்து மகிழ்ந்திருப்பர். இக் காட்சியைப் பிற உலகத்திற் காண முடியாது.

ஒழுக்கமுள்ளவர் எழுத்துக்குத் தனி எடையுண்டு. ஒழுக்கமுள்ளவர் சொல்லுக்குத் தனி எடையுண்டு என்பது மட்டுமல்ல, ஒழுக்கமுள்ளவர் நடிப்புக்கும் ஒருதனி எடையுண்டு. இந்த உண்மையை ஒவ்வொரு நடிகரும் உள்ளத்தே வைத்துப் பாதுகாத்தாக வேண்டும். அண்மைக் காலம்வரை ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் ஒழுங்கு முறைக்கும் முதலிடம் கொடுத்து நாடகக் கலையைக் காப்பாற்றி வந்தவர்களும் வளர்ந்து வருபவர்களும் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஸி. கண்ணையா அவர்கள்: நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் டி.கே.எஸ். சகோதரர்கள் ஆவர். - ' ' . -

இக் காலத்தில் நாடகம் நடத்துவோரிற் சிலர் காட்சி அமைப்புகளில் கவனத்தைச் செலுத்துவதில்லை.

"யாரும் அற்ற கானகத்தில் - என்று நடிகன் பாடிக் கொண்டிருப்பான். அக் காட்டில் ஆர்மோனியக்காரன் வாசித்துக்

கொண்டிருப்பான்.

"மனமோகன மானே உன்மீது மையல் கொண்டேனே' எனப்

பெண்வேடம் பூண்டவனைப் பாராமல், ஆர்மோனியக் காரனைப்

பார்த்துப் பாடிக் கொண்டிருப்பான் நடிகன்.