பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(FTag um - )ー 97

நாடகவகைகளில்"ஒருகளநாடகம்"ஓரங்கநாடகம்" என்பது ஒன்று. அது காட்சிகளை மாற்றாமல் ஒரேகாட்சியை வைத்து,ஒரு சிறுகதையை அமைத்து, ஓர்உண்மையைப் புலப்படுத்த நடத்திக் காட்டுவதாகும். பல காட்சிகளைக் கொண்ட ஒரு பெரிய நாடகத்தைப் பலமணி நேரம் பார்த்து ஓர் உண்மையை அறிந்து கொள்வதைவிட, ஒரு காட்சியில் ஒரு நாடகத்தைக் கண்டு, ஓர் உண்மையை அறிவதை மக்கள் அதிகமாக விரும்புவர். ஒரு கள நாடகம் பொழுதைக் குறைத்துப் பயனைப் பெருக்குவதில் தலைசிறந்ததாகும். - -

நாடகவகைகளில் இன்பியல் நாடகம், துன்பியல்நாடகம் என இருவகையுண்டு. இவை முறையே இன்பத்தை முடிவாகக் கொண்டதும், துன்பத்தை முடிவாகக் கொண்டதுமாகும். இவை வெற்றிபெறுவதும், வீழ்ச்சியடைவதும், காண்கின்ற மக்களின் விருப்பத்தைப் பொறுத்ததாக இருக்கும்.

நாடகக்கலை ஓர் உயர்ந்த கலை. பல மாதங்கள் பல மேடைகளிற் பேசி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்கின்ற கருத்துக்களை ஒரு நாளில் ஒரே நாடகத்தில் மூலம் பதிய வைத்துவிட முடியும். அவ்வாறே பல ஆண்டுகள் படித்து அறியக் கூடியவைகளை, பல மாதங்கள் கேட்டு அறியக் கூடியவைகளை, ஒருநாளில், ஒரே நாடகத்தைப் பார்த்து அறிய முடியும்.

"நாடகமே உலகம்" என்பது வாக்கு. "உலகமே நாடகமேடை' என்பது மற்றொரு வாக்கு. "நாடகத்தால் உன்னடியார்போல் நான் நடித்தேன்' என்பது ஒரு பக்தரின் வாக்கு. 'முன்பு நாங்கள் மட்டுமே நடித்தோம், இப்போது எல்லோருமே நடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது ஒரு நடிகரின் வாக்கு. "மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்தும் கலைகளில் நாடகக்