பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 —C - தமிழின் சிறப்)

தமிழகம்தான் எனத் துணிந்து கூறலாம். நாடகக் கலையைப் பற்றிய, நடிப்புக் கலையைப்பற்றிய உறுப்புக்களை ஆள்வது பற்றிய, முகத்தில் காட்டவேண்டிய மாறுதல் பற்றிய இலக்கண நூல்கள் பல அக்காலத்திலேயே தமிழகத்தில் தோன்றியிருந்தன. அவற்றில் ஒன்று கூட இன்று இல்லை அனைத்தும் அழிந்துபோய் விட்டன. சில நூல்களில் மேற்கோளாக வந்த பாடல்களிலிருந்தும், உரையாசிரியர்களின் குறிப்புகளிலிருந்தும் அந் நூல்களில் சிலவற்றின் பெயர்களை மட்டுமே அறிய முடிகிறது.

அழிந்துபோன நாடக நூல்கள் கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம், கூத்த நூல், பரதம், பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முறுவல், விளக்கத்தார் கூத்து, அடிவைப்பு, அரி வரிசை உறுப்பாட்சி, முத்திரை விளக்கம், மெய்ப்பாட்டியல், முகக்குறிமுறை, கைக்குறி முறை, இன்னுரைக் குறிமுறை, நிருத்த நூல், தாளக் கட்டு, நாட்டிய விளக்கம் முதலியன.

இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ? அவற்றில் என்னென்ன செல்வங்கள் இருந்தனவோ? அவை அனைத்தும் ஒரேடியாய் எப்படி அழிந்தனவோ? என எண்ணும்பொழுதே நமதுள்ளம் வருந்துகிறது. நமது புண்பட்ட உள்ளத்திற்கு இதுபோது ஆறுதல் அளிப்பதெல்லாம் சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள விளக்க உரையும் மட்டுமே. அவற்றிலிருந்து பல உண்மைகளை அறிய முடிகிறது. -

சிலப்பதிகாரத்தை இயற்றமிழ்ப்புலவர்கள் மட்டுமே விரும்பிப் படித்துவருகின்றனர். இசைப் புலவர்களும், நடிப்புப் புலவர்களும்