பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நாடகச் சிறப்பு )ー10リ

o அதைக் கட்டாயம் படித்துத் தீரவேண்டும். இன்றேல் அவர்களின் கலையில் ஒளியிராது. இயலில் இசையும், நாடகமும் அடங்காது. ஆனால் நாடகத்தில் இயலும் இசையும் அடங்கும். இயலுக்கு ஒரு புலமை போதும் இசைக்கு இயல், இசை ஆகிய இரு புலமையும் வேண்டும். ஆனால் நாடகத்திற்கோ இயல், இசை, நாடகம் ஆகிய முப் புலமையும் வேண்டும். இன்றேல் நாடகத்தில் கலையும் இராது; களையும் இராது.

ஆடுகள மகளிர், பாடுகள மகளிர் தன்மைகள் எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு இலக்கணங்கள் உள்ளன: ஆடலாசிரியன் அமைதி, பாடலாசிரியன் அமைதி, குழலாசிரியன் அமைதி என அவர்களுக்கும் இலக்கணங்கள் உள்ளன. அந்த இலக்கணப்படி இன்று ஆடுவோரையோ, பாடுவோரையோ, ஆசிரியரையோ அரங்குகளில் காண்பது அரிதாகவே இருக்கிறது.

'அரங்கு' என்பதங்கு உரையாசிரியர் ஆடுகளமும் பாடுகளமும் எனப் பொருள் கூறுகிறார். இக் கலைக்களம் நெற்களம், போர்க்களம் போல இடத்தைப் குறிக்கிறது. இச் சொற்கள் இன்பம் பயப்பன.

அரங்கின் அமைப்பு ୫ଓ நாடக அரங்கு எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. - - -

(அ) அரங்கு அமைக்கும் இடம் சாம்பல் தரை, பொடித்தரை, களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை முதலியன கூடாது.