பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 —C தமிழின் சிறப்)

(ஆ) துவர்ப்புப் பயமும், புளிப்பு நோயும், கைப்புக் கேடும். உவர்ப்புக் கலக்கமும் உண்டு பண்ணும், ஆதலின் அவை நீக்கப் பெற்றன. -

(இ)ஊரின்நடுவில் இருத்தல்வேண்டும்.அதுவும் தேரோடும் வீதிகள் ஒன்றின் எதிர்முகமாக அமைதலும் வேண்டும்,

(ஈ) அரங்கிற்குப் "புகுமுக வாயில் புறப்படு வாயில் என இரு வாயில்கள் அமைத்தாக வேண்டும்.

(உ) அரங்கு ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீட்டமும், ஒரு கோல் உயரமும் இருத்தல் வேண்டும். ஒரு கோல் என்பது உத்தமன் கைப்பெரு விரல் 24 கொண்டது. உத்தமர் என்போர் ஒல்லியும் தடிப்பும், நெட்டையும் குட்டையும் இல்லாதவர். இந்த அளவின்படி ஒருகோல் என்பது ஏறத்தாழ ஒருமுழம் ஆகிறது. இது நமக்கு வியப்பைத் தருகிறது.

நாடக இலக்கணம்

1. ஆடல்

இருவகை இவை சாந்தி, விநோதம் என்பன அகக்கூத்து, புறக்கூத்து எனவும் கூறப்பெறும். இவ்விரண்டுவகைக் கூத்தம் 11 தொழிற்பெறும். முதல்வகை அல்லியம் முதலிய6, மறுவகை துடி முதலாகிய 5 - -

(அ) சொக்கம். இது சுத்த நிருத்தம். அதாவது தாள லயத்தை ஆதாரமாக உடையது. (ஆ) மெய்த் தொழில்; இது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இது உள்ளக் குறிப்பை ஆதாரமாக