பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Fê_ED– 103

உடையது. (இ) 'அபிநயம் இது கதையைத் தழுவாது பாட்டின் பொருளுக்கு ஏற்பக்கையைக்காட்டிஉணர்த்துவது. (ஈ) நாடகம் இது கதை தழுவி வருகின்ற கூத்து. a *

இவை நான்கும் நாயகன் சாந்தமாக ஆடும் கூத்தாதலின் 'சாந்திக் கூத்து' எனப் பெறும். பின் வரும் ஏழும் விநோதக் கூத்துகளாம் (உ) இது காமமும், வென்றியும் பொருளாகக் கொண்டும், குரவைச் செய்யுளைப் பாட்டாகக் கொண்டும், ஏழு அல்லது ஒன்பது பேர் கை பிணைந்தாடுவது. (ஊ) கலிநடம்'; இது கழாய்க் கூத்து எனப்பெறும். (எ) ”குடக்கூத்து தலையில் கும்பம் வைத்து ஆடுவது (ஏ) கரணம் வீழ்ந்து ஆடுதல். (ஐ) தோற்பாவை தோலால் பாவை செய்து ஆட்டுவது. இது மொம்மையாட்டம் எனப்பெறும். (ஓ) நகைக் கூத்து: நகைப்பிற்குரிய வேடிக்கைக் கூத்துகளாம். -

2. பலவகைக் கூத்து இதுவன்றி, வசை என இருவகைப்படும். மாற்றான்.ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் வென்றி யாகும். பலவகை உருவமும் பழித்துக் காட்டுவது வசை யாகும். . . w.

3. கூத்தின் இலக்கணம்

இது நிலை, பாதம், அங்கம், வருத்தனை, நிருத்தக் கை என ஐவகைப்படும். இதில் நிலை அறுவகை; பாதம் ஐவகை, அங்கம்

பதினாறு வகை வருத்தனை நான்கு வகை நிருத்தன்கைமுப்பது வகை; ஆக வகை 61, - , , ।