பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 —U - தமிழின் சிறப்பு)

4. விலக்கு உறுப்பு

இது வேந்து விலக்கு, படைவிலக்கு, ஊர் விலக்கு என்னும் விலக்குக்களாகிய பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவது. இது 14 வகையாகும். 1. பொருள் 2, சாதி, 3. யோனி, 4. விருத்தி இந் நான்கும் ஒரு வகை; 5. அவை, 6. குறிப்பு, 7. சமத்துவம், 8. அபிநயம், இந்நான்கும். மற்றொரு வகை 9. சொல், 10. சொல்வகை, 11. வண்ணம், 12. வரி; இந்நான்கும் வோறொரு வகை 13. சந்தி, 14. சேதம்; இவ்விரண்டும் பிறிதொரு வகை.

இப் பதினான்கு துறைகளுக்கும் விளக்கங்கள் உள. நான்காவதாக உள்ள விருத்திக்கு ஒரு விளக்கத்தை இதன் அடியிற் காண்க. 'விருத்தி என்பது நாடகத்தின் இயல்பு என்பதாகும். இவ்வியல்பு நால்வகைப்படும். (அ) சாத்துவதி அறம் பொருளாகக் கொண்டு தெய்வ மானிடர் தலைவராக வருவது (ஆ) ஆரபடி பொருளைப் பொருளாகக் கொண்டு வீரமகன் தலைவனாக வருவது, (இ) கைசிகை இன்பம் பொருளாகக் கொண்டு காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. (ஈ) "பாரதி என்பது கூத்தன் தலைவனான் நடன், நடிபொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது என்றாகும்.

5. சுவை

சுவை ஒன்பது வகைப்படும். அவை: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, இன்பம், துன்பம், வெகுளி, நகை, சமநிலை என்பன. இதனை நவரசம் என்பர் வடமொழியாளர். உயர்ந்த நாடகத்தில் இவ் ஒன்பது சுவையும் காணப்பெறும்.சிறந்தநடிகர்கள் இத்தனை சுவைகளையும் தம் முகக்குறிகளினாலேயே காட்டி மகிழ்விப்பர்.