பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகச் சிறப்பு 〕一 105

6. நடிப்பு

இது 24 வகைப்படும். இதனை அவிநயம் எனக் கூறுவதும் உண்டு.

1. வெகுண்டோன், 2. ஐயமுற்றோன், 3. சோம்பினோன். சி. குடித்தோன், 5. மகிழ்ந்தோன். 6.அழுக்காறுடையோன், 7. இன்ப முற்றோன், 8. தெய்வ முற்றோன், 9. மயக்கமுற்றோன். 19: உடன்பட்டோன், 11. உறங்கினோன், 12. உறங்கி விழித்தோன், 13. செத்தோன், 14. மழையில் நனைந்தோன், 15. பனியில் நனைந்தோன், 16.வெயிலிற்காய்ந்தோன், 17.வெட்கமுந்றோன். 18. வருத்தமுற்றோன், 19. கண்ணோவுற்றோன், 20. தலிை நோவுற்றோன், 21 நெருப்புப்புட்டோன், 22. சீதமுற்றோன். 2% வெப்பமுற்றோன், 24 நஞ்சு உண்டோன்-என்பனவாம்.

இவை 24-க்கும் சுவை 9-க்கும் சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதைக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டிய பாடல்கள் 33-ம் நல்விளக்கம். அ?ை ஒவ்வொன்றும் நடிப்புக் கலையின் திறத்தைக் கூறி நம்மை வியப்படையச் செய்கிறது.

இவற்றுள் 24ஆவதாகிய நஞ்சுண்டோன் நடிப்புக்கு உரிய இலக்கணப் பாடலை மட்டும் இங்குக் காணுங்கள்.

"கொஞ்சிய மொழியும் கூரெயிறு மடித்தலும்

பஞ்சின் வாயிற் பணிதுரை கூம்பலும் தஞ்சம் மாந்தர் தம் முகம் நோக்கிஒர் இன்சொல் இயம்புவான் போல்இயம் பாமையும் நஞ்சுண் டோன்தன் அவிநயம் என்ப"

3