பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 —C. தமிழின் சிறப்பு)

பிறவற்றிற்கும் இவ்வாறு நூற்பாக்கள் உள்ளன.

7. சொல்

சொல் என்பது ஓர்உறுப்பு. அது உட்சொல்புறச்சொல், ஆகாயச் சொல் என மூவகைப் படும். (அ) உட்சொல் என்பது நெஞ்சோடு கூறுவது.(ஆ) புறச்சொல் என்பது கேட்போர்க்கு உரைப்பது. (இ) ஆகாயச் சொல் என்பது தானே கூறுவது. -

8. சொல் வகை

சொல்வகையாவது சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் - என நால்வகைப்படும். (அ) சுண்ணம்; நான்கடியால் வருவது. (ஆ) சுரிதகம்: எட்டடியால் வருவது. (இ) வண்ணம்: பதினாறு அடிகளால் வருவது (ஈ) வரிதகம், முப்பத்திரண்டு அடிகளால் வருவது இந்நான்கின் விளக்கமும் விரியும் ஆதலின் வண்ணத்தின் விளக்கத்தை மட்டும் அடியிற் காண்க:

(அ) பெருவண்ணம்; இது 6 வகை. (ஆ) இடை வண்ணம்: இது 21 வகை, (இ) வனப்பு வண்ணம். இது 41 வகை ஆக வகை 3-க்கும் வண்ணம் 68 ஆம். தொல்காப்பியர் 70 வண்ணம் கூறியுள்ளார். 100 வண்ணம் கூறினாரும் உளர்.

9. வரி

வரி என்பது வரிக்கூத்துக்கு உரிய பாடல், இது பண், திறம், ! செயல், பாணி என நால்வகைப்படும். வரிப்பாடல்கள்

திணைநிலைவரி,கிணைநிலைவரிமுகமுடைவரி, முகமில்வரி, படைப்புவரி எனப் பலபடப் பாகுபாடு எய்தும்,