பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ಕಿ சிறப்பு - )ー 1()7

இவற்றின் இயல்புகள் அனைத்தையும் சிலப்பதிகாரத்தின் கானல்வரியுள்ளும், வேனிற்காதையுள்ளும் விளங்கக்காணலாம்.

இதுகாறும் நீங்கள் கண்டநாட்கக்கலையின் இலக்கணம் ஒரு நூலின் ஒரு பகுதியிற் கிடைத்த ஒரு சிறுநிழல். இதைக் கொண்டு பார்க்கும் பொழுதே பழந்தமிழகத்தின் நாடகக் கலையின் பெருமை அளவிட்டுக் கூறமுடியாதது எனத் தோன்றுகிறது. இவ்வளவு உச்ச நிலையில் இருந்த கலையில், பெரும்பகுதி அழிந்தே போயிற்.சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில், பாதுகாக்கப்பெற்றுவந்தது இக்கலை, மன்னர்கள் மறைய மறைய இக்கலையும் மறைந்து வந்தது போலும் அவற்றை முழுதும் மறையவிடாமல், வறுமைவாயப்பட்டபோதும் தமது வயிற்றிலும், வாயிலும், கையிலும், காலிலும் வைத்துக்கட்டிப் பாதுகாத்து வந்து, இன்று நம்மிடம் ஒப்புவித்திருக்கிற இயல், இசை, நாடக முத்தமிழ்ப் புலவர்களுக்கும் நாம் வணக்கம் செலுத்தியாக வேண்டும். எப்போதும் செலுத்தாவிடினும், நாம் கொண்டாடுகிற முத்தமிழ் விழாக்களிலேனும் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.

இதுகாறும் கூறியவைகளால் நாடகத்தின் சிறப்பை ஒருவாறு அறியலாம். முடிவாகக் கூறுமிடத்து, நாடகத்தமிழ், மொழியின் ஒரு பிரிவு. நாடகக்கலை தமிழகத்தின் செல்வம். ஆகவே, அது தமிழனின் சொந்தச் சொத்து அவற்றை வளர்த்து வாழவேண்டியதும், முடியாவிடில் அழியவிடாமலாவது பாதுகாக்க வேண்டியதும் இன்றைய தமிழ் மக்களின் கடமையாகும்.

வாழட்டும் நாடகக் கலை !