பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் சிறப்பு )ー 109

இலக்கியங்களின் வகைகள்

சங்ககால இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் என இலக்கியங்களும் மூவகையாகும்.

சங்க கால இலக்கியம்

சங்ககாலம் என்பது, தமிழ் மன்னர்கள் சங்கம் வைத்து நடத்தித் தமிழ்வளர்த்த காலம். அச் சங்கங்களும் முதல், இடை, கடை என மூன்று. அவற்றின் காலமும் முறையே ஐயாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் அனைத்தும், கவிதை இலக்கியங்கள், அதையடுத்துக் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களும் கவிதைகளாகவே அமைந்தன. அவற்றுள் பல இன்றில்லை.

தமிழகத்தில் அடிக்கடி கடற்கோள்கள் ஏற்பட்டுத் தமிழ் நிலப்பரப்பையும், தமிழ்ச் சுவடிகளையும் அழித்து விட்டன. நாலாந்தா நூல்நிலையம் எரிக்கப்பெற்ற போதும் பல அரிய தமிழச்சுவடிகள் எரிந்துபோயின. மக்கள் சுவைக்க வில்லை என்பதை அறிந்த கறையான்கள், நன்றாகத் தமிழ்ச் சுவடிகளைத் தின்று தீர்த்து விட்டன. இன்னும் பல வகையிலும் பல நூல்கள் அழிந்து போயிருக்கின்றன. அவ்வாறு, -

அழிந்துபோன இலக்கிய நூல்கள்

அகத்தியம், அடிநூல். அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரிய முறை, ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இந்திரகாளியம், இளந்திரையம், எதிர்நூல்,