பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சிறப்பு D– 117

- என்று இல்லாமல் பழந்தமிழ் நூல்களையும் படித்துப் பயன்பெறுவது நல்லது. பொன்னும், மணியும், முத்தும், பவளமும், மட்டுமல்ல செல்வங்கள். இலக்கியங்களில் புதைந்துகிடக்கின்ற கருத்துக்களும் உயர்ந்த செல்வங்கள் என்ற உண்மையையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

உலகம்

தமிழ்ப் பேரறிஞர்கள் தாங்கள் இயற்றிய நூல்களையெல்லாம் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கு என்றில்லாமல் உலக மக்களுக்கென்றே படைத்திருக்கின்றனர். இவ்வுண்மையை அவர்கள் இயற்றிய நூல்களிலெல்லாம் முதற்பாட்டில், முதலடியில், முதற் சொல்லாக உலகத்தை வைத்துச் செய்திருப்பதிலிருந்தே நன்கறியலாம். சேக்கிழார் பெரிய புராணத்தை 'உலகெலாம் உணர்ந்தது' என்று தொடங்கினார். கம்பர் தமது இராமாயணத்தை, "உலகம் யாவையும் எனத் தொடங்கியிருக்கிறார். நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையை, 'உலகம் உவப்ப' என்றே தொடங்கினார். நாற்கவிராசநம்பி அகப்பொருள் நூலை, 'மலர்தலை உலகத்து' எனத் தொடங்கினார். கபிலர் தமது அகவலை, 'உலகத்திரே, உலகத்தீரே" என இருமுறை அழைத்துத் தொடங்கினார். இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தை 'அங்கண் உலகளித்தலால்" என்றுதான் தொடங்கியிருக்கிறார். வள்ளுவரும் திருக்குறளை, 'ஆதிபகவன் முதற்றே உலகு" என்றுதான் தொடங்கினார். இறுதியாக இவ்வுலகைவிட்டு மறைந்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களுங்கூட, தாம் இயற்றிய “படுக்கைப் பிதற்றல்' என்னும் நூலில், "உலகை நோக்கு மின், உலகை