பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 —C -அப்து

புறநானூறும் நமக்கு முழுதும் கிடைக்கவில்லை. முன்னடியில்லாத பாட்டுக்கள் 2. முடிவில்லாத பாட்டுக்கள் 6 இடையடியில்லாத பாட்டுக்கள் 40 அடியோடு இல்லாத பாட்டுக்கள் 2. ஆகமொத்தம் 400 என்றே இருக்கிறது.

- முத்தொள்ளாயிரம் என்பது ஒர் அருமையான இலக்கிய நூல், பெயரைக் காணும்பொழுதே 2700 பாடல்களைக் கொண்டது என்பது புலப்படும். பாண்டியனைப்பற்றி 900. சேரனைப்பற்றி 900,சோழனைப் பற்றி900மும் என மும்மன்னர்களையும் பற்றிப் பாடப்பெற்றவை. அவற்றுள் இன்று நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாம் 200 பாடல்களே. இந்த 200 பாடல்களில் உள்ள கருத்துச் செல்வங்களைக் காணும்பொழுதே, மற்ற 2500 பாடல்களில் உள்ள செல்வங்களும் எப்பே ாதாவது எங்கிருந்தாவது கிண்டக்குமா? என நமது மனம் ஏக்கமடையும்.

சங்ககாலத்திற்குப்பின் தோன்றிய இலக்கியங்களில் குறிப்பிடத் தகுந்தவை ஐம்பெருங் காப்பியங்கள். ഷങ്ങഖ சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள்ளும் வளையாபதி குண்டலகேசி என்ற இரண்டும் இன்றில்லை. சிதறுண்டு கிடந்த ஒலைச் சுவடிகளிலிருந்து இதுவரை 20 பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. -

ஆகவே, பழந்தமிழ் இலக்கியங்களில் குறைபாடுடைய-மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள 36 நூல்களே இன்று நம்மிடையே உள்ளன. இவையே. தமிழின், தமிழரின், தமிழகத்தின் செல்வம். ஏறத்தாழ இன்றுள்ள 30,000 நூல்களுள் இதிலிருந்து பிறந்தவையே. இன்றைய நூல்களை மட்டும் படித்து மகிழ்வது