பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(€ಾಕ್ತಿ சிறப்பு D— 1 : 5

புறப்பொருள் நூல்கள். இவை அனைத்தும் தமிழ் மக்களின் காதலை, வாழ்வை, பண்பை, கொடையை, வீரத்தைப் படம்பிடித்துக் காட்டுவன.

பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது. ஐந்தினை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி எனப்பதினெட்டு. -

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் பதினெண் மேல்கணக்கு என்றும்; இங்குக் கூறிய பதினெட்டும், கீழ்க்கணக்கு என்றும் கூறுவதுண்டு, மேல்கணக்குநூல்கள் பதினெட்டும் காதலையும், வீரத்தையும், கொடையையும் குறிப்பன. கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் வலியுறுத்தி, மக்களிடையே ஒழுக்கத்தை வளர்ப்பன.

இந்தப் பத்து, எட்டு, பதினெட்டு ஆகிய முப்பத்தாறு நூல்களே, இன்றைய தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பழஞ்சொத்து, இவையுங்கூட, நமக்கு முழு உருவில் கிடைக்கவில்லை. பத்துப் பாட்டில் முதற் பாட்டுக்கே ஐயப் பாட்டுக்கு இடம் ஏற்பட்டுவிட்டது. - - -

பரிபாடலில் இன்றைக்கு கிடைத்திருப்பவை 22 பாடல்களே. - மற்றவையனைத்தும் அழிந்தே போய் விட்டன.