பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 —C தமிழின் சிறப்)

தொகுக்கப்பெற்ற நூல் புறநானூறு. சேரமன்னர்களைப் பற்றி மட்டும் பாடியுள்ள 100 பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல்தான் பதிற்றுப் பத்து. ஒவ்வொரு பத்துப்பாட்டும் ஒவ்வொரு புலவரால் பாடப் பெற்றது.பத்துப்புலவரால் பாடப்பெற்றது பத்து பத்துப் பாட்டுக்கள் ஆதலின், இது பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. -

பரிபாடல் என்பது பரிபாட்டுப்பா வகையால் ப்ாடப் பெற்றது. இது இசைப்பாட்டு வகைகளில் ஒன்று இந்நூல்70 பாடல்களைக் கொண்டது. நூல் முழுவதும் மதுரையை, திருப்பரங்குன்றத்தை, வையையை, திருமாலை, முருகனைப்பற்றிப் பாடப் பெற்றிருப்பதால், இதனைப் பாண்டிநாட்டு நூல் என்றே கொள்ளலாம். இந்நூலுக்கு பழைய உரை ஒன்று உண்டு. அது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள பரிமேலழகர் கண்ட உரையேயாம் இப் பாடல்கள் அனைத்தும் அருமையானவை அதுவும் பலரால் பாடப்பெற்றவை. இசையும் அருமையானவை இதனைத் தொகுத்து உதவிய பேரறிஞனின் பெயரைக்கூட அறிய முடியவில்லை. •

இந்த எட்டுத் தொகை நூல்களும், அவற்றிலடங்கியுள்ள பொருள்பற்றி அகம், புறம் என இருவகையாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. அகம் என்பது உள்ளத்தே நிகழும் காதலைப் பற்றியது. புறம் என்பது புறத்தே நிகழும் கொடை வீரம் பற்றியது.

நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு, கலித்தொகை அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் நூல்கள், பதிற்றுப்பத்து பரிபாடல், புறநானூறு ஆகிய மூன்றும்