பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ទ្រឹត្យ យប់ឬ D— 118

'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிற்த ரேத்தும் கலியே; அகம்புறம்என் றித்திறந்த எட்டுத் தொகை.

என்பது.

இந் நூல்களிலுள்ள பாடல்கள் அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சில மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. பல்வேறு புலவர்களால் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றி பல்வேறு காலங்களில், பாடியுள்ள, பல்லாயிரம் பாடல்களிலிருந்து திரட்டி எடுத்துத் தொகுக்கப்பெற்ற, எட்டு நூல்களே எட்டுத் தொகை என்பது.

இதில் 9 அடிமுதல் 12 அடிவரையிலுள்ள 400 பாடல்கள் உள்ள தொகுப்பு நூல் நற்றினை. 4 அடி முதல் 8 அடிவரையுள்ள 400 பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் குறுந்தொகை. 13 அடி முதல் 31 அடி வரையுள்ள 400 பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் அகநானூறு இது நீண்ட அடிகளையுடைய தாகலின் நெடுந்தொகை எனவும் கூறப்பெறும்.

3 அடி முதல் 6 அடி வரையுள்ள குறுகிய அடிகளையுடைய பாடல்கள் ஐந்நூறு கொண்ட தொகை நூல் ஐங்குறு நூறு. 150 பாடல்களை மட்டும்கொண்டுதொகுக்கப்பெற்றது.கலித்தொகை. இது கலிப்பாவால் பாடப்பெற்றது; ஆதலின் இப்பெயர் பெற்றது போலும். -

சேர, சோழ, பாண்டிய மின்னர்கள் மூவரையும், கொடை வள்ளல்கள் பலரையும் பற்றிப் பாடியுள்ள 400 பாடல்களால்