பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 —[. தமிழின் சிறப்பு

இவற்றுள் 5 பாட்டுகள் ஆற்றுப்படையாக அமைந்தவை. ஆற்றுப்படை என்பது பரிசுபெற்ற ஒரு புலவர், மற்றொரு புலவனிடம், தனக்குப் பரிசு வழங்கிய கொடைவள்ளலின் பெயர், குணம், பண்பு, ஊர், வழி முதலியவைகளைக் கூறி, அவரிடம் சென்று பரிசு பெற்று மகிழ்க என ஆற்றுப்படுத்துவதாகும்.

ஏழு நரம்புள்ள சிறு யாழ்கொண்டு பாடுவோர் சிறுபாணர். 21 நரம்புள்ள பெரிய யாழ்கொண்டு பாடுவோர் பெரும்பானர். இவ்விருதிறத்தினர்களுக்குவள்ளல்களின் இருப்பிடத்தைக் கூறி ஆற்றுப்படுத்தியிருப்பதே சிறு பாணாற்றுப் படையும், பெரும்பாணாற்றுப் படையுமாகும். இப் பாடல்களைக் கேட்ட மன்னர்களும், வள்ளல்களும் பெரும்பொருள்களைப் பொன்னும் மணியுமாகக் கொட்டிக் குவித்து வழங்கியிருக்கின்றனர். வள்ளல்கள் பலர் நிலங்களை வழங்கினர். சில மன்னர்கள், மலைகளை வழங்கியிருக்கின்றனர். இன்னும் சில மன்னர்கள், பல ஊர்களையே வழங்கியிருக்கின்றனர். -

இப் பத்துப் பாட்டுகளையும் படிப்பவர்கள் தமிழ்ச் சுவையை மட்டுமல்ல, பழங்காலத் தமிழ் மக்களின் வரலாற்றை, வாழ்வு முறைகளை, பழக்க வழக்கங்களையும் கண்டு மகிழலாம்.

எட்டுத் தொகை

எட்டுத் தொகை நூல்கள் "நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு பதிறற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநாநூறு, புறநாநூறு” என்பன. இந்த எட்டு நூல்களின் பெயரையுங்கொண்ட செய்யுள் ஒன்றும் உண்டு. அதைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவன்ார் அது,