பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் சிறப்பு )ー 复升班

பத்துப் பாட்டு

பத்துப்பாட்டின் முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா, இதன் ஆசிரியர் நக்கீரர். இரண்டாவது பாட்டு பொருநராற்றுப்படை. இதுவும் ஆசிரிப்பா 249 அடிகளைக் கொண்டது. இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். 3ஆவது பாட்டு சிறுபாணாற்றுப் படை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது 269 அடிகளைக் கொண்டது. இதனைப் பாடியவர் நல்லூர் நத்தத்தனார். நான்காம் பாட்டு பெரும்பாணாற்றுப்படை,500 அடிகள்ால் அமைந்த ஆசிரியப்பா இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணன்ார். ஐந்தாம் பாட்டுமுல்லைப்பாட்டு, இது 103 அடிகளைக்கொண்டது.இதன் ஆசிரியர் ப்ொன்வாணிகன் மகனார்நப்பூதனார். - ...

ஆறாம் பாட்டு மதுரைக் காஞ்சி; 782 அடிகளைக் கொண்டது. இதை 'வஞ்சிப்பாட்டு என்றும் கூறுவதுண்டு. இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். ஏழாவது பாட்டு நெடுநல்வாடை 188 அடிகளால் அமைந்த ஆசிரியப்பர்.இதன் ஆசிரியரும் நக்கீரனாரே. எட்டாவது பாட்டு குறிஞ்சிப் பாட்டு. இதனைப் பெருங்குறிஞ்சி எனவுங் கூறுவர். 261 அடிகளைக் கொண்டது. இதன் ஆசிரியர் கபிலர். ஒன்பதாம் பாட்டு பட்டினப் பாலை. இது 301 அடிகளைக்கொண்டது. இதனை 'வஞ்சி நெடும் பாட்டு எனவும் கூறுவதுண்டு. இதைப் பாடியவர்பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார். பத்தாம் பாட்டு மலைபடுகடாம். இதன் ஆசிரியர் பெருங்குன்றுர் பெருங் கோசிகனார், 503 அடிகளைக் கொண்டது. இப்பாடல்கள் பத்தும் 103 அடிகளுக்குக் குறையாமலும், 892 அடிகளுக்கு மேற்போகாமலும் அமைந்தவை. ". . . ." . . . . .