பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

- - பிறின் சிடிட் 10 —U தமிழின் சிறப்)

எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து.இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து ெ பயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் 'திரு' என்ற அடைமொழி சேர்த்து திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால், அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் 'தமிழ் ஞானசம்பந்தன் எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குக் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

வைணவ சமய ஆச்சாரியராகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் 'தமிழ் எனக் கூறாது. பல்வேறு அடைமொழிகளிட்டு விட்டுசித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்க முகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ் வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்" எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும். - -

நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு" என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணி பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமதுமொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை"யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.