பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 —( தமிழின் சிறப்பு)

இன்று தமிழ் இலக்கியங்களைக் கொண்டுதான் அறியமுடியும். இவை அனைத்தையும் அறியவேண்டுமானால், "தமிழ்ச் செல்வம்" என்ற ஒரு நூலாலும் சிறிதளவு அறியலாம்.

குண்டலகேசி

நிலையாமையைப் பற்றிச் சொல்லவந்த குண்டலகேசி நிலையாமலே போயிற்று. அது சொல்லியுள்ள ஒரு உயர்ந்த கருத்தை, நாம் பிறமொழி இலக்கியங்களிற் காண இயலாது. மனைவி இறந்துவிட்டாளே எனக் கணவன் கதறி அழுகிறான். அதைக் கண்டகுண்டலகேசி ஆசிரியர், 'தம்பி!உன் அழுகையில் எனக்கு நம்பிக்கையில்லை. வீணாக ஏன் அழுகிறாய்? அழுகையை நிறுத்து' எனக்கூறுகிறார்.காரணம் வினவியபோது: அவர் கூறுகிறார்; மனிதனுக்கு பருவம் ஏழு; அவை குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம், காளைப்பருவம், குடும்பப் பருவம், முதுமைப் பருவம், தடிப் பருவம், பாடைப் பருவம் எனப்பெறும். இவற்றில் நீ ஐந்து பருவங்களில் இறந்திருக்கிறாய். நீ என்றைக்காவது ஐயோ நான் இறந்து போனேன் என அழுதிருக்கிறாயா? இல்லையே..தான் இறந்ததற்காகக் கூட அழாத ஒருவன், பிறர் இறந்ததற்காக அழுகிறான் என்றால் அதை நான் எப்படிநம்புவது? எனஅறைகிறார்."உலகமக்களே! நீங்கள் சாகப் போகிறவர்கள்; ஆகவே, தவறு செய்யாதீர்கள்' எனப் பல பேராசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். குண்டலகேசி ஆசிரியர் ஒருவர்தான், தம்பி! நீ செத்துப்போனவன் தவறு செய்யாதே' எனக் கூறியவர் எப்படி இப்புதிய கருத்து? பாடல் வேண்டுமா? இதோ,