பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 —C தமிழின் சிறப்பு)

(1) ஐந்தாவது சாதியினர் அந்தணரைச் சார்ந்தது அதிசயமே என்பது.

(2) ஐந்து அங்குலமுள்ள விரல்கள் கண்களைச் சார்ந்தது அதிசயமே என்பது.

(3) இத்தனை நாளாக என்னைப் பார்க்க விரும்பிக் காத்துக் கொண்டிருந்த நீ இப்போது என்னைக் கண்டதும் கண்களை மூடிக் கொண்டது அதிசமே என்பது.

(4) ജ്ഞങ്ങ நாளாக என்னைப் பார்க்க விரும்பிக் காத்துக் கொண்டிருந்த நீ இப்போது என்னைக் கண்டதும் கண்களை மூடிக் கொண்டது அதிசயமே என்பது.

இவ்வாறு 400 பாடல்களிலும் வருகிற 1600 அடிகளும், ‘வெட்கப்பட்டுக் கண்களை மூடுகிற” ஒரு துறையைப் பற்றி மட்டுமே பாடப் பெற்றிருக்கும். கண்களை மூடுவதற்குமுன்பு வேறு துறை, கைகளை எடுத்தபின்பு வேறு துறையாகிவிடும் இத் துறையிலும் ஒவ்வொரு பாடலிலுள்ள ஒவ்வொரு அடியிலும், இது போன்ற கருத்துகள் இரண்டு மூன்று சிலேடையாக அமைந்திருக்கும் இந்த நூலைப் பாடியவர் பெயர் அமிர்த கவிராயர் காலம் 17 ஆம்நூற்றாண்டு - -

இதுபோன்று மற்றத் துறைகளுக்கும் 400 பாடல்களைக் கொண்ட கோவை பாடியுள்ள புலவர் பெருமக்கள் பலர் இருந்திருக்கின்றனர். இக்கோவை, "ஒரு துறைக் கோவை' எனப்படும், மாணிக்கவாசகர் பாடியுள்ள “திருக்கோவையார்' என்ற நூல்,400 துறைகளையும் பற்றிப் பாடியவை, திருவள்ளுவர் கூறிய திருக்குறளில், இன்பத்துப்பாலில் 25 அத்தியாயங்களில், 250 பாடல்களில், சில துறைகளைப்பற்றி மட்டுமே கூறப்பெற்றுள்ளது. -