பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 —C - தமிழின் சிறப்பு)

என்ற ஒரே சொல். இந்த இரு சொற்களையும் தமிழ் தெரியாதவர்களை மொழி பெயர்க்கும்படி செய்தால் பெரு நகைப்பைஉண்டாக்கும்.தமிழ்மொழி ஒரு பண்பட்டமொழியாக அமைந்த மொழி. பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே அதற்கு இலக்கணம் அமைந்ததினாலேயே அது ஒரு சிறந்த மொழி என மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

இதுகாறும் கூறியவாற்றால் தமிழ் இலக்கணத்தின் சிறப்பை ஒருவாறு அறியலாம். தமிழ் நூல்களிலுள்ள பொருள்களை அறிய வேண்டுமானால், கட்டாயம் இலக்கணத்தைப் பயின்றாக வேண்டும். இன்றேல் பயனிராது. படித்துப் பயனடையுங்கள்.

வாழட்டும் தமிழகம்

வளரட்டும் தமிழ்மொழி!

முற்றுப் பெற்றது