பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ( தமிழின் சிறப்)

ஸ்மேதராக, விஜயம் செய்து, வதுவரர்கள், ஆசிர்வதிக்க, பிரார்த்திக்கிறேன் என்ற சொற்கள் காணப்பெற்றன. இப்பொழுது இச் சொற்கள் அனைத்தும் விலக்கப்பெற்று தனித்தமிழ்ச் சொற்களாகிய திருமணம், அழைப்பு, ஆண்டு, திங்கள், நாள், திருவாளன், திருச்செல்வி, உறுதி, உற்றார்உறவினர், வந்திருந்து, மண மக்களை வாழ்த்தி, அருள வேண்டுகிறேன் என்பவை காணப்பெறுகின்றன.

தலைவர், சொற்பொழிவாளர், செயலாளர், பொருளாளர், நன்றிகூறல் என்பவைகளையெல்லாம் வடமொழியினர் அக்கிராசனாதிபதி, பிரசங்கியார், காரியதரிசி, பொக்கிஷதார், வந்தனோபசாரம் என்றெல்லாம் மாற்றிக் கூறி, அதைக் தமிழ் எனவும் கூறி ஏமாற்றிக் திணிக்கப் பார்த்தனர். இக் காலத் தமிழ்மக்களின் விழிப்புணர்ச்சி அதைத் தவிடு பொடியாக்கிவிட்டது. -

தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி எழுத்தாளர் என்ற போர்வைகளைப் போர்த்துக்கொண்டு, சில தமிழ்ப் பகைவர்கள், “மன்னன் தன் தோள்களில் மலர்மாலை அணிந்து பல்லக்கு ஏறி ஊர்வலம் வந்தான்' என்ற சொற்றொடரை ராஜன் தன் புஜங்களில் புஷ்பஹாரங்களைச் சூடிக்கொண்டுரதம் ஏறிப்பவனி வந்தான்' என்று கூட உளறி, தமிழ்ப் புலவர்களின் எதிர்ப்பை மட்டுமல்ல. பொது மக்களின் எதிர்ப்பையும் பெற்று அழிந்து ஒழிந்துபோயினர். இவை அனைத்தும் தமிழோடு ஆரியம் புரண்ட கதை.

1938இல் சென்னைக் கடற்கரையில் இரு கல்லூரி மாணவர்கள் எனக்கருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். "ஏன்