பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமைச் சிறப்பு - ) 21

தமிழிலும் திணித்துப் பார்த்தனர். பாவம், முடியவில்லை. அவர்கள் கண்டது தோல்வியே.

கடந்த நூற்றாண்டில் அவர்கள் தமிழை விழுங்கிவெற்றி பெற்றுவிடுவோம் என்றுகூட நம்பினர். "பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால்தான், பிறமொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களோடு சேர்ந்தால்தான், தமிழ்மொழி வளரும்.” என்ற பொய்யான கூற்றை நமது முன்னோர்களில் சிலரும் நம்பிவிட்டதும், அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆங்கிலேயர் காலத்தில் பதவியில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் அவர்களே ஆதலின் 'மென், உமன் என்பதைகூட 'ஆண், பெண் என எழுத விரும்பாமல், 'புருஷர்கள், ஸ்திரிகள்" என்றே எழுதி, தமிழ்ச் சொற்களை அழிக்க முனைந்தனர் என்றாலும், தமிழறிஞர்கள் பலர் இவற்றைத் துணிந்து எதிர்த்தால் அவர்களின் எண்ணம் அடியோடு வீணாயிற்று.

இத்துறையில் எவர் துணையுமின்றித் தனித்துநின்று தமிழ் மக்களுக்கு ஒரு புதுவழி காட்டி வெற்றிபெற்றவர் ഥങ്ങpഥങ്ങ് அடிகளே யாவர். இன்றேல், தமிழும் பிறமொழிகளைப் போல் ஆரியத்தோடு இரண்டறக் கலந்து அழிந்துபோயிருக்கும். "தனித்தமிழ் நடை' என்பது அவர் திருப்பிவிட்ட ஒரு பெருந் திருப்பம். அந் நடை 'மறைமலையடிகள் நடை" என்ற பெயரையும் பெற்று விட்டது. தமிழ் உள்ளவரை மறைமலையடிகளின் பெயரும் இருந்தேதீரும்.

சில ஆண்டுகளுக்கு முன்வரைகூட திருமண அழைப்புகளில் விவாகம், முகூர்த்தம், பத்திரிகை வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, செளபாக்யவதி, நிச்சயம், இஷ்ட மித்திர, பந்து, ஜன,