பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ( தமிழின் ł)

ஒரு மொழியின் தாய்மொழி எது? என்பதை எவரும் எளிதில் அறியமுடியும். அதற்குத் துணைபுரிபவை மூன்று:

1. அம் மொழியின் உயிர் எழுத்துக்கள்

2. எண்ணுகிற எண்கள்

3. மக்கள் உறுப்புகளின் பெயர்கள்

இம் மூன்றையும் ஆராயத் தொடங்கினால் உண்மை தானாகவே வெளிப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக முதலில் மலையாள மொழியை ஆராய்வோம். அதன் உயிர் எழுத்துக்கள் அ முதல் ஒள வரை அனைத்தும் தமிழ் எழுத்துக்களே. ஒன்று.இரண்டு, பத்து, நூறு என எண்ணும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களே. மக்கள் உறுப்புகளில் தலை, நெற்றி, மயிர், கண், மூக்கு காது. வாய், நாக்கு பல், உதடு தொண்டை கழுத்து கை, நெஞ்சு, வயிறு, தொடை, கால், விரல், நகம் முதல் தோல் எலும்புவரை யாவும் தமிழ்ப் பெயர்களே. இன்னும் பார்க்க வேண்டுமானால், 1ğ6ö) 6õlı_j [T6ïï மொழியில் வலிந்து ஏறிக்கொண்டிருக்கிற வடசொற்கள் சிலவற்றை நீக்கிவிட்டால், மீதியுள்ள அனைத்தும் தமிழ்ச் சொற்களாகவே காட்சியளிப்பதைக் காணலாம்.கன்னடம்,தெலுங்கு,துளு முதலியனவும் இப்படியே. ஆகவே, இம் மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றியவை எனக் கூறுவது சிறிதும் பொருந்தாததாகும். -

பிறமொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய ஆரியர் அம் மொழிகளில் தங்களின் சொற்களைத் திணித்தனர். அதற்கு முன்னோடியாக அவர்களின் ஜ, ஸ ஷ, ஹ, கூடி என்ற வடமொழி

எழுத்துக்கள் ஐந்தையும் முதலில் திணித்தனர். வெற்றிபெற்றனர்.